யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் 10 ஆம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் புதிதாக சேர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
சிற்றுண்டிகளின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சைனிஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாகவும், சாதாரண தேநீரின் விலை 30 ரூபாவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருமெனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் செயற்பட்டு வரும் ஐ-போன் தொழிற்சாலையில் 3 இலட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கிற்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சாலையோரம், வயல்வெளிகள், மலைகளிலும் சிறிது நேரம்…
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வறுமை காரணமாக வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இடைவிலகல் வீதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வடமாகாணத்தில் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 485 மாணவர்கள், 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதன் பின்னர், பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு வெவ்வேறு வேலைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் குறிப்பிட்டார். 2021ஆம் ஆண்டில் 105 ஆகக் குறைந்துள்ளதோடு, 2022ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியுள்ளதாக கல்விப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி புகையிரத சேவை கொழும்பு மற்றும் மருதானைக்கிடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கண்டி முதல் மாத்தறை வரையிலான கடுகதி புகையிரத சேவை இன்றைய தினம் தாமதமாக இடம்பெறும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார் என கட்சி எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும் அதன்பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷ செவிமடுத்ததாகவும் அதனால்தான் அவர் ஜனாதிபதியாக தோல்வியடைந்ததாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
பால்மா மற்றும் திரவ பால் சந்தைக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னணி இறக்குமதியாளர்கள் மற்றும் பால்மா விநியோகஸ்தர்களுக்கு இடையில் நேற்று வர்த்தக அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பால்மா பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் இதன்போது அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்படி, சந்தையில் பால்மா விநியோகத்தை அதிகரிக்க அல்லது திறந்த கணக்கு முறையின் கீழ் பால்மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஊடாக டொலருக்குரிய சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஆண்களுக்கான பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரே தோல்வியடைந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரே, பிரான்ஸின் கில்லஸ் சைமனை எதிர்கொண்டார். இப்போட்டியில், என்டி முர்ரே, 6-4, 5-7, 3-6 என்ற செட் கணக்குகளில் பிரான்ஸின் கில்லஸ் சைமனிடம் தோல்வியடைந்தார்.
பண்டாரவளை-ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு (31) இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த வீட்டின் உரிமையாளரும் உறவுக்கார பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 73 வயதான வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஹெலோவின் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஹெலோவின் நிகழ்ச்சியில் ஏராளான மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். கூட்டத்தினர் அனைவரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறியோடினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.