அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த கடல் கண்காணிப்பு கப்பல் கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியேட்டல் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 156,400 ரூபாவாக குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் டொலரின் பெறுமதி அதிகரித்தன் பின்பு இதுவே குறைந்த விலை என்று கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு பவுண் தங்கம் 22 கரட் 175,000 ரூபாவாகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 190,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, உலக சந்தையில் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய (01) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,650 டொலர்களுக்கு கீழ் குறைந்துள்ளது.
முட்டை ஒன்றின் விலையை 7 ரூபாவுக்கும், 10 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்ணைகளில் முட்டை ஒன்றை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அந்த விலையை விடவும் அதிக விலைகளுக்கு முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சகல பொருட்களின் விலைகளும் சற்று குறைவடைந்து வரும் நிலையில், முட்டையை விலை குறைத்து விற்பனை செய்ய முடியும். குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படைய முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டியை சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் சிப்பாய்யே சடலமாக மீட்டப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பளை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீர் கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் செய்யும் அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தாமதக் கட்டணத்தை அறவிட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தாமதக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் கட்டணத்தை பெற்ற 90 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் அந்த அரசு நிறுவனங்களிடம் இருந்து தாமத கட்டணம் வசூலிக்கப்படும். இது தொடர்பான சுற்று நிருபத்தை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மாவட்டத்தின் பெரும்பாலான எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், மக்கள் அதனை பெற முடியாது திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. கையிருப்பில் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டாலும் விலை திருத்தம் செய்யப்படும் வரை எரிவாயு சிலிண்டர்களை சில விநியோகஸ்தர்கள் விற்பனை செய்ய மறுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில், கடந்த ஐந்து வருட காலமாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றம் இன்னமும் வழங்கப்படவில்லை என தெரிவித்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதுவரை காலமும் பணிக்கு அமர்த்தப்பட்டு ஐந்தாவது வருடத்தை பூர்த்தி செய்த பின்னர் தமக்கான இடமாற்றத்தினை பெறுவதற்கான அனுமதி கோரப்பட்ட போதிலும் இவ்வருடம் மேலும் இன்னும் ஒரு வருடத்தினை அதாவது ஆறு வருடத்தினை பூர்த்தி செய்த பின்னரே இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். கடந்த ஐந்து வருட காலத்திற்கும் மேலாக நாளொன்றுக்கு 80 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து தாம் பணிபுரிந்து வருவதாகவும் இதன் காரணமாக தாம் பாரியமான உளைச்சல்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்த ஆசிரியர்கள், காலை 5 மணிக்கு தாம் பணிக்காக புறப்பட்டாள் மாலை 5 மணி வரை…
தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, கோட்டா தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள ரிஷாட், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் தன் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அடுத்தத் தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து என்னை 7 மாதங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருந்தார். எவ்வாறாயினும், பதவிக்காலம் முடிவதற்குள் நாட்டு மக்களால் கோட்டாபய ராஜபக்ஷ விரட்டியடிக்கப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நான் விடுதலை அடைந்தேன். உடனடியாக இல்லை என்றாலும் உண்மை கண்டிப்பாக வெற்றிபெறும் எனவும் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 150 தொழிற்சங்கங்களும், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும் கொழும்பில் இன்று (02) பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அல்லது அருகில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை கொழும்பில் இன்று எந்தவிதமான போராட்டங்களையும் முன்னெடுக்கக்கூடாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா மற்றும் சோசலிஷ முன்னிலைக் கட்சியின் காரியாலங்களுக்கு அறிவித்தல் விடுக்க பொலிஸார் சென்றிருந்ததாகவும் அறிய முடிகிறது.
(நூருல் ஹுதா உமர்) கல்முனை கல்வி வலயத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக Edu Free Academy யினால் தரம் 05 யில் கல்வி பயிலும் இவ்வாண்டு (2022) புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச வினாத்தாள்கள் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவரும், Edu Free Academyயின் கல்முனை பிரதேச இணைப்பாளருமான எம்.என்.எம்.அப்ராஸினால் பாடசாலைகளுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது Edu Free Academy பணிப்பாளர்களான ஐ.எம்.றொஸான் மற்றும் பாத்திமா ஸஹ்ரா நிஸ்பர் ஆகியோரின் வழிகாட்டுதலில், கல்முனை கல்வி வலயத்தில் ஆரம்பகட்டமாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு கல்விக்கோட்ட பாடசாலைகளுக்கு இந்த வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை கிரீன் பீல்ட் கமு/கமு/ ரோயல் வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம். எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம், மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயம் போன்ற…