வட்ஸ்அப் குறுஞ்செய்தி தளத்தைப் பயன்படுத்தும். ‘+84, +62, +60, +234’ ( நாட்டின் தொலைபேசி இலக்கம் ) மற்றும் பல நாடுகளின் கோடில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாக வட்ஸ்அப் பயனர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இதற்கு முன்னதாக இதே போல மோசடிகளுக்கு வட்ஸ்அப் தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தளத்தின் மூலம் பயனர்களை தொடர்பு கொள்வது எளிது. இந்த நிலையில் மாதந்தோறும் சுமார் 2 பில்லியன் செயற்பாட்டு (Active accounts) பயனர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் தள பயனர்கள் மீண்டும் மோசடி அழைப்புகளை பெற்று வருகின்றனர். இப்போதைக்கு மலேசியா, வியாட்நம், நைஜீரியா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் குறியீட்டிலிருந்து இந்த அழைப்புகள் வருவதாக தெரிகிறது. இது ஏன் வருகிறது என்பது தெரியவில்லை. சிலருக்கு வேலைவாயப்பு சார்ந்த செய்திகளும் வருகின்றன. அதனால் பயனர்கள் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தெரியாத எண்ணில்…
Author: admin
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர். 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் 2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. தொடர்ச்சியான வறட்சி, வெளிநாட்டு கையிருப்பு, அரசியல் கொந்தளிப்பு, உயர் பணவீக்கம் மற்றும் அதிகரித்த பொதுக் கடன் போன்ற பல காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 2019 இல் உணவுப் பாதுகாப்பின்மை 10 சதவீதமாக இருந்த ஒரு நாட்டிற்கு இது ஒரு வியத்தகு தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது என அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 79ஆவது சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சபாநாயகரின் சான்றிதழைப் பெற்று, “உள்நாட்டு வருவாய் (திருத்தம்)” சட்டமூலம் “உள்நாட்டு வருவாய் (திருத்தம்)” சட்ட எண். 04 இன் 2023 அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்து இன்னும் துல்லியமாக ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழு நியமிக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்த வேளையிலும் திருட்டு மற்றும் ஊழல்களை மறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர இன்று (10) அளித்த அறிக்கைக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதன்பிறகு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் தலையிட்டார். குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர (ஸ்ரீ.பொ.பெ.) – சபாநாயகர் அவர்களே, விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள உண்மைகள் பற்றி நான் தனியாகப் பேசப் போவதில்லை. இருப்பினும், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒத்திவைப்பு குறித்து நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டால், சபாநாயகர், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர்…
இலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 113 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது, நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பாலியல் துன்புறுத்தல்கள், வேறும் வகையிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். வெளிநாட்டுப் பெண்களின் பணப்பைகளை பறித்தல், தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிகளவான துன்புறுத்தல் சம்பவங்கள் தென் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சபை முன்னெடுச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் சிறுபோகம், இடம்பெறும் மார்ச் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும், பெரும்போகம் இடம்பெறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில், எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே, குறித்த காலப்பகுதியில், விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், எலிக் காய்ச்சல் பரவலில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என வைத்தியர் குஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பொம்மைகள் சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது. பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து அந்த ஆணையத்தில் பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பொம்மைகளில் பிளாஸ்டிக் மட்டுமின்றி பல்வேறு இரசாயனங்கள் அடங்கிய பல்வேறு வகையான வர்ணங்களும் பயன்படுத்தப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் உட்கொள்வதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகா ஒருவரை ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ´படோவிட்ட லொகு மல்லி´ என அழைக்கப்படும் சமிந்த குமார சில்வா என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், அத்திடிய, லேக் வீதி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர் காரில் பயணித்த போதே கைது செய்யப்பட்டதாகவும், 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 300,000 ரூபா பணம், 2 கூரிய ஆயுதங்களும் வாகனத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது நேற்று (09.05.2023) வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த சில நாட்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், வட அகலாங்குகள் 02N இற்கும் 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல்…
நேற்றைய தினத்துடன் (மே 09) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி – நேற்றைய தினம் 309.46 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.98 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 327.13 ரூபாவிலிருந்து 326.62 ரூபாவாக குறைந்துள்ளது. கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 310.55 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.75 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 324 ரூபாவாக குறைந்துள்ளது. சம்பத் வங்கி – நேற்றைய தினம் 310 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 309 ரூபாவாக குறைந்துள்ளது. எனினும் விற்பனை பெறுமதி மாற்றமடையாமல் 324 ரூபா என்ற நிலையிலேயே உள்ளது.