எதிர்வரும் இரு வாரங்களுக்குள் மருந்துகளின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். மருந்துகளின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது. எவ்வாறாயினும் தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Author: admin
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாரிய சலுகை கிடைத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தமது வருமானத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பியிருந்தால் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து சில சமூக ஊடக வலைத்தளங்களில் அண்மையில் பகிரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக, வங்கியின் நிர்வாகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அத்தகைய கருத்துக்களின் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லையென்றும் அந்தக் கருத்துக்களை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் எழக்கூடிய சந்தேகங்களையும் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் தற்போதைய மாறுபாட்டைக் கண்டறிய அடுத்த வாரம் விசேட பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, நாட்டில் அண்மைய காலத்தில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதானால் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் தலைவர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். கொவிட் ஓமிக்ரோன் XBB திரிபு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக கூறப்படுவதுடன், இலங்கையில் தற்போது பரவிவரும் சரியான திரிபினை கண்டறிய பரிசோதனைகள் உதவும் எனவும் அவர் மேலும் கூறினார்.
பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பயணச்சீட்டு மற்றும் ரயில் பயணச்சீட்டு என்பன கியூ.ஆர். முறைமையாக மாற்றப்படவுள்ளதாகவும் அதனூடாக வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறிள்ளார். அத்துடன் முடியுமான அளவு விரைவாக டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு, தவறிழைக்கும் சாரதிகளுக்கு மதிப்பெண் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி, மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. மின்சார உற்பத்தி தரவுகள் மற்றும் விற்பனை தரவுகள், எரிபொருள், நிலக்கரி மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை மற்றும் இந்த ஆண்டுக்கான மின்சார உற்பத்தித் திட்டம் மற்றும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின் உற்பத்திக்கான செலவு தற்போது குறைந்துள்ளது. டீசல், பெற்றோல், நிலக்கரி போன்றவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மின்சாரத் தேவையும் சுமார் 18 சதவீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய நிலைவரத்தை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைக்க முடியும் என பொதுப்…
கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நேற்று(15) முற்பகல் முதல் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாயர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவம் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர். வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன. பின்னர் அவை சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன. இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு பொலிஸார் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதி ஒன்றில் கண்ணிவெடி அகற்றும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் குடும்பப் பெண் ஒருவர் காடையர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகி உள்ளது. முல்லைத்தீவு எல்லைப்பகுதியில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பெண் ஊழியர் ஒருவர் காட்டிற்குள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்வேளை சப்பாத்து அணிந்த முகம்கள் இறுக்க கட்டப்பட்ட இரண்டு நபர்கள் குறித்த பெண்ணினை காட்டிற்குள் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோக முயற்சியினை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவரின் பிடியில் இருந்து பெண் தப்பித்து வீதிக்கு வந்து அங்கு பணியாற்றும் ஏனையவர்களை அழைத்துள்ளார். இந்த நிலையில் குறித்த காட்டுப்பகுதியில் பெண்ணினை கடத்திய இருவரும் தப்பி சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து மருத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
வெலிகம , தெனிபிட்டிய பகுதியில் நேற்று (15) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மகன் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.