Author: admin

39 பேருடன் பயணித்த சீன மீன்பிடி கப்பலொன்று, இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துவருவதாகசீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய இந்தியப் பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 என்ற இந்த சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்ததாகவும் அதில் இருந்த 17 சீனர்கள்,17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை கொண்ட அதன் பணியாளர்களைக் காணவில்லைஎன்று சீன ஊடகமொன்று இன்று (17) தெரிவித்துள்ளது. கடந்த 03ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனிலிருந்து புறப்பட்ட நீளமான இந்த மீன்பிடி கப்பல், மாலைதீவுக்கு தெற்கு திசையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சீன நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணிககு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கொழும்பு உயர் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்துள்ளது. சிவலிங்கம் ஆரூரன் என்ற பொறியியலாளர், கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தல சந்தியில் வைத்து கோட்டாபய ராஜபக்ச மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். எவ்வாறாயினும், குறித்த வழக்கு நேற்று (மே 16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்றம் சாட்டப்பட்டவரை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசில் டி சில்வா முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த உண்மைகளை கவனத்தில் கொண்ட நீதிமன்றம்,…

Read More

மனநோய்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் இல்லை என அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார் . இது ஒரு தீவிர சமூக ஆபத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மனநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பது கடுமையான சமூக அவலமாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். உடல் நோய்கள் மட்டுமின்றி மனநோய்களிலும் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். இவ்வாறான மருந்துகளுக்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிக்காததால் இன் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது அரசாங்கத்தால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

நேற்றைய தினத்துடன் (மே 16) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி – நேற்றைய தினம் 302.66 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 300.23 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 319.94 ரூபாவிலிருந்து 317.37 ரூபாவாக குறைந்துள்ளது. கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 303.85 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 300.88 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 314 ரூபாவாக குறைந்துள்ளது. சம்பத் வங்கி – நேற்றைய தினம் 305 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 303 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக குறைந்துள்ளது.

Read More

நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலையினால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்ததுடன், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன (DEN 1, DEN 2 , DEN 3, DEN 4). டெங்கு தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சினுள் விரிந்து செல்வதுடன் சில நபர்களிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படமாட்டாது என்பதுடன் இன்னும் சிலரிடம் நோய் அறிகுறிகள் தென்படும். நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுள் பெரும்பாலானவர்களிடம் சாதாரண வைரஸ் காய்ச்சல் நிலைமை, டெங்கு காய்ச்சல் அல்லது அசாதாரண நோய் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை ஏற்பட முடியும். டெங்கு காய்ச்சல் காரணமாக ஆகக் கூடுதலாக காணக்கிடைப்பது…

Read More

யாழ். மாநகரசபை முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வாக்குமூலம் பெற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட ஆனோல்ட் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இனறு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கெக்கிராவ – எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹஇழுப்பள்ளம பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதிய கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பின்னர், மாணவன் சேனாபுர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார், அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு 32 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரை 2 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 6 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை விஞ்ஞானப் பிரிவிலுள்ள பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த இரண்டரை மாதங்களாக தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மதிப்பீட்டு பணிகளுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

அவுஸ்திரேலியாவின் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி, ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குச் சென்று பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிகளுக்கு இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம். *இணையத்தளம்* https://www.smartmoveaustralia.gov.au

Read More