வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்திஅதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், கிராமப்புற தனிநபர் வீட்டுத் தொகுதிகளாகவும் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர தமது காணியில் வீடு கட்டுவதற்கும் இதன் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்கான நிதிப் பங்களிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16) நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமவுடன் இடம்பெற்றதுடன், இதன் போது எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தகவல்கள்…
Author: admin
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இதய நோயறிதல் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றை பாவனையிலிருந்து மீளப் பெற சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ஒன்றியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மயக்க மருந்துகளின் 100,000 குப்பிகள் அகற்றப்பட்டதாக அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று தெரிவித்தார். கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகளின் தரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரியும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு தாமரைத் தடாக சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்து தாழ்நிலப்பகுதிகள் நாளை (17) பிற்பகல் 2 மணி வரை கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அப்பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.
அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2023 மே 23 ஆம் திகதியில் இருந்து பாராளுமன்ற பொதுச் செயலாளராக, தற்போதைய பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானியும் பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளருமான திருமதி கே.ஏ. ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர. இதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின்படி, மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் சில விற்கப்படும், மற்றவை மூடப்படும், இணைக்கப்படும் அல்லது மறுகட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை சுமார் இரண்டு மாதங்களில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று திறைச்சேரியின் மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. 430 நிறுவனங்களில் 39 பெருநிறுவனங்கள், 218 நிறுவனங்கள், 173 சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் 21 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அடங்கும். விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் தேசிய ஊடகங்கள் அடங்கும். இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான ரூபவாஹினி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் விற்பனை செய்யப்படுகிறது.
குவைத்துக்கு பணிப் பெண்களாகச் சென்று அந் நாட்டின் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கை பெண்கள், இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி வேறு இடங்களில் பணிபுரிந்த நிலையில் சொந்த விருப்பப்படி இலங்கை திரும்புவதற்காக தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்தவர்களே இவ்வாறு நாடு திரும்பினர். இவர்கள் அநுராதபுரம், வவனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபா 43 சதம் – விற்பனை பெறுமதி 318 ரூபா 79 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 400 ரூபா 77 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 348 ரூபா 55 சதம் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 87 சதம் – விற்பனை பெறுமதி 238 ரூபா 02 சதம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 74 சதம் – விற்பனை பெறுமதி 214 ரூபா 91 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபா 24 சதம் – விற்பனை பெறுமதி…
கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்னதாக முன்பதிவு செய்த நபர்களுக்கான கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இன்னும் 02 நாட்களில் நிறைவடையும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் இன்றி வழமை போன்று கடவுச்சீட்டுகளை தமது அலுவலகத்தினால் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் கடவுச்சீட்டு பெறுவதற்கு குடிவரவு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதற்கான வாய்ப்பை பெறுவதற்கு மக்கள் முந்தைய நாள் முதல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து வரிசையில் நிற்கும் சிலருக்குக் கூட கடவுச்சீட்டு பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதையும் காணமுடிகிறது. ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தாலும், வரிசைக்கு வெளியே உள்ளவர்களுக்கு சிலர் பணம் வாங்கிக்கொண்டு…
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து இழப்பீடு கோரும் நோயாளிகள் பற்றிய பிரத்தியேக அறிக்கையைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு கேள்விக்குரிய மருந்தை தயாரித்த இந்திய நிறுவனமான இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு கோரியுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். “நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை, இதனை அல்விதா பார்மாவுக்கும் தெரிவித்துள்ளோம்,” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நோயாளர்களின் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சில சமயங்களில் தரமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. உலக அளவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. “விநியோகஸ்த்தர் கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறார், மேலும் இது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இண்டியானா ஆப்தால்மிக்ஸ் இந்தியாவில் கண்…