(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் பவள விழாவை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 2003 ம் ஆண்டை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ” Real Champion 2k03 ” அணியினர் சம்பியனாக முடிசூடிக் கொண்டனர். பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 2003ம் வருட கா.பொ.த சாதாரண தர அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ” Real Champion 2k03″ அணியினரும் 2014ம் ஆண்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி “team 98” அணியினரும் பங்கு பற்றியிருந்தனர். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற team 98 அணியினர் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்திருந்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய Real Champion 2k03 அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றனர். 84 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய team 98 அணியினர் 4.3 பந்து வீச்சு ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து…
Author: admin
பிரான்சில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர். அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கடந்த 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றனர் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின் கடவுசீட்டுக்கள் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஏழு பேரும் தங்களது கடவுச்சீட்டுக்களை திருடிச் சென்றதாக நம்பப்படுகிறது.
பதுளை – பண்டாரவளை – ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.40 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி நித்திரைக் கொண்டமையினால் வேன் ஒன்று வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொஸ்லந்த உடடியலும பிரதேசத்தில் இரண்டு இளம் காதலர்களுக்கு அனுமதியின்றி இரவைக் கழிக்க இடம் வழங்கிய சுற்றுலா வழிகாட்டிகள் இருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் திருமதி கே.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். ஹப்புத்தளை மற்றும் பூனாகலை பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற குறித்த பகுதியில் காதலர்கள் இருவர் கூடாரமிட்டுத் தங்கிய பொழுது காட்டு யானையின் தாக்குதலுக்கு இருவரும் இலக்காகியுள்ளதுடன் 23 வயதுடைய காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்த பெண், தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பயிற்சி பெற்று வந்த மாத்தறை கேகனதுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த பெண்ணின் காதலன் (22) விபத்தில் காயமடைந்து தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக பணியாற்றிய இருவரை கொஸ்லந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றில்…
நச்சுத் தன்மைக் கலந்த தேங்காய் எண்ணெய் இலங்கையில் உள்நாட்டு வியாபாரிகளினால் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அதன் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நச்சுத்தன்மை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று கெக்கிராவ பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டது. இலங்கைக்கு தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து வெவ்வேறு இரசாயன திரவங்களை பயன்படுத்தி அவற்றை தூய்மைப்படுத்தி சந்தைக்கு விடுவிக்கின்றமை தொடர்பில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தேங்காய் எண்ணெய் தொகுதி துறைமுகத்தில் இருந்து எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் அகில…
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 12ஆம் திகதி மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் 672,283 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மழை காரணமாக, தற்போது பல வைரஸ் நோய்கள் பரவி வருவதாகவும், கொவிட் தொற்றுநோய் நிலைமையும் நாட்டில் பதிவாகி வருவதாகவும் சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது.
மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீமெந்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மொத்த சீமெந்து விற்பனையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. தற்போது, சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2,600 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதத்திற்குள் சீனியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்களிடம் காணப்படும் சீனி கையிருப்பு தொடர்பில் ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறினார். அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை இறக்குமதியாளர்கள் ஏற்றுக்கொண்டதற்கமைய, அடுத்த ஒரு மாதத்திற்கு சீனி விலை அதிகரிப்பு தொடர்பான சிக்கல் ஏற்படாது என அவர் தெரிவித்தார். கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையையும் 195 ரூபாவை விட அதிகரிக்காதிருக்கவும் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளமைக்கு அமைய, வரி அதிகரிக்கப்பட்டாலும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்குமாறு நளின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
2023 ஏப்ரல் மாதத்திற்கான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார். தமது டுவிட்டரில் பதிவிலே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகமாகும் என்றும் பணம் அனுப்பிய தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மொத்தமாக அனுப்பப்பட்ட தொகை 1867.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.