மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் இருந்த எல்.டி.டி.ஈ பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், போரின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வொன்றின் போது கொழும்பில் இன்று இரு தரப்பினரிடையே அமைதியின்மை ஏற்பட்டது. சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை பொரளை பொது மயானத்திற்கு முன்பாக உயிரிழந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. எவ்வாறாயினும், குறித்த இடத்திற்கு வந்தவர்கள் விளக்குகளை ஏற்றி உயிரிழந்த விடுதலை புலி உறுப்பினர்களுக்கான நினைவு கூரும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர்.
Author: admin
அமைச்சரவை அமைச்சுக்கள் 30 இனை மட்டும் வைத்திருந்தால் போதும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை எதிர்காலத்திலும் பேண வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாகம், நீர்ப்பாசனம் மற்றும் நீர்வேலிகள் என்பன ஏற்கனவே ஒரே அமைச்சின் கீழ் வந்துள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயம் என்பனவும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால், நிதி நிதியினால் வழங்கப்படும் இலக்குகளை மாத்திரமன்றி, அதனையும் தாண்டிய பொருளாதார சுபீட்சத்தையும் அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரேசில் கூட்டுறவு முகமை (ABC) மூலம் பிரேசில் கூட்டமைப்பு குடியரசு இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட 10,000 இன்சுலின் குப்பிகள் மற்றும் 08 மில்லியன் பாலிப்ரொப்பிலீன் குறிப்புகளை வழங்கியது. 17 மே 2023 அன்று கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து இன்று இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனஸிடம் இருந்து வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுகொண்டார். இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை எடுத்துரைத்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர், பிரேசில் அரசாங்கத்தின் இந்த நல்லெண்ணச் செயலுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 312.37 ரூபாய் ஆகவும் பதிலாகி உள்ளது. சுமார் 13 மாதங்களுக்குப்பிறகு இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழ் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தங்கத்தின் விலையிலும் சற்று வீழ்ச்சி ஏற்படுள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 168,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 154,000 ஆகவும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் பயிரடப்பட்ட காணி ஒன்றினை நேற்று (17) ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்தபிரதேசத்திலுள்ள கஞ்சா செய்கை செய்யப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு அங்கு 15 பேச் நிலப்பரப்பில் பயிரடப்பட்ட 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில் 125 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த பாரியளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்திய படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (8) கொண்டு வரப்படவுள்ளனர்.
ஏறாவூர் நகரில் ஐந்து நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ள நிலையில், இதன் மூலம் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஐக்கிய ஆடை மன்றத்தின் பொதுச் செயலாளர் யோஹான் லாரன்ஸ் தெரிவித்தார். தையல் ஆடைகளுக்குத் தேவையான அனைத்து வகையான நூல்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் 2026ஆம் ஆண்டு நாட்டின் 30 வீத நூல் தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.
2022 கல்விப் பொதுத் தராதரப் (சாதாரண தர) பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பாடசாலைப் பரீட்சார்த்திகள், இன்று முதல் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மூலமாக அதனைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை தொற்று நோய்ப் பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் சுமார் 170 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 7ம் திகதி மூன்று பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பதுடன் கடந்த 6 மற்றும் 16ஆம் திகதிகளில் ஒரே நாளில் தலா 13 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். உயிரிழந்த 16 பேர் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 16856 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளை குறுகிய காலத்தில் அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சகலரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள முடியுமெனவும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.