வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்யதுகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். • கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான். • வடமேல் மாகாண ஆளுநர் – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன • வடக்கு மாகாண ஆளுநர் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
Author: admin
டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார் டெங்கு பரவலைக் மட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுத்தம் செய்யும் தினமாக அறிவிக்க தற்போது சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2023 ஜனவரி மாதம் முதல் மே 16 வரை நாடளாவிய ரீதியில் 34,511 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும்,புத்தளம்…
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவுத் திணைக்கள் ஆணையாளர் நாயகம் பிரதீப் சப்புநந்திரி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இதுவரையிலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள், அதற்கான விண்ணப்பத்தை உரிய பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டாலும் விண்ணப்பம் கிடைத்தமைக்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்காவிடின் விண்ணப்பதாரிகள், அந்த திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். இதுவரையிலும் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை பிழையின்றி பூர்த்திச் செய்து கல்விக்கற்கும் பாடசாலையின் அதிபர் அல்லது நிலையான வதிவிட பிரிவில் இருக்கும் கிராம சேவகர் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். விண்ணப்பங்கள் கிடைத்தமை தொடர்பிலான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்காத விண்ணப்பத்தாரர்கள் 0115226100 அல்லது 0115226162 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வரலாற்றில் பாரிய திறைசேரி உண்டியல் ஏலத்தை இன்று ஒரே நாளில் நடத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் அங்கு விற்கப்படும். 91 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.9,000 கோடிக்கான உண்டியல்களும், 182 நாட்கள் மற்றும் 364 நாட்களில் முதிர்வு செய்யப்படும் தலா ரூ.4,500 கோடிக்கான திறைசேரி உண்டியல்களும் அங்கு ஏலம் விடப்பட உள்ளன. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெறும் போது, அரசாங்கத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக திறைசேரி உண்டியல்களை வெளியிடுவது சவாலான நிலை என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடன் மறுசீரமைப்பு அபாயத்தை கருத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு கடன் வழங்கும் தரப்பினர் அதிக வட்டிக்கு கடன்களை வழங்குவதே இதற்கான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் அதிக வட்டி வீதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வது பொருளாதாரத்திற்கு பொருத்தமான…
# இன்று பல பகுதிகளில் வெப்பமான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) பல பகுதிகளில் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் நாளைய தினம் செல்லுபடியாகும் வகையில் நேற்று (16) பிற்பகல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களிலும் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் “கவனம்” கோரும் மட்டத்தில் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அதை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மற்றும் செயல்களில் ஈடுபடுவது சோர்வை ஏற்படுத்தும். மேலும் நீரிழப்பு மற்றும் நீரிழப்பு காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (17) மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்…
மே. 15ஆம் திகதி திங்கட்கிழமை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எவருமே மரணிக்க வில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான புதிய நபர்கள் 13 பேர், இன்று (16) செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மொத்த எண்ணிக்கை 6,72,371 ஆகும்.
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெரோம் இன்று அதிகாலையில் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை இன்று வழங்கியுள்ளது. குருணாகல் பொலிஸாரினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி வைத்தியர் ஷாஃபி இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி, 02.05.2023 முதல் தேசிய விலங்கியல் பூங்காத் திணைக்களத்தின் விலங்கியல் பூங்காவில் விலங்குகளுக்கு உணவு வழங்குதல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் உள் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் கீழ்க்கண்டவாறு திருத்தப்பட்டுள்ளது.
50 கிலோ கிராம் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15,000 ரூபாவாகும். குறித்த உரத்தை, அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.