பிரேசிலின் முன்னாள் உதைபந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், ‘உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டதால் இனி பிரான்ஸ் அணி கிண்ணத்தை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கிண்ணத்தில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்’ என்றார். லயோனல் மெஸ்சி உலகக் கிண்ணத்தை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல’ என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலகக்கிண்ணப் போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.
Author: admin
பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம், இன்று (14) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் திகதி வரை பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் உட்பட அனைத்து பணிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் தேவையான பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதாகவும் பேராதனை கலை பீட விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் ஏற்பட்ட. மண்சரிவு காரணமாக இதுவரை 120 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது னமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கொங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற 12 ஆவது போட்டியில் Colombo Stars அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் குசல் மெந்திஸ் 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். அசாத் ஷபிக் 58 ஓட்டங்களையும், தாருக்க தாபரே 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதன்படி, 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சரித் அசலங்க 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ரவி பெபாரா ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களைப் பெற்றுக்…
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாயாக இருந்தது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின்படி, 2022 ஆகஸ்ட் மாத இறுதியில் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 24,69 பில்லியன் ரூபாய் அல்லது 24 டிரில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் கடன் சுமையின் கணக்கீடு வருடாந்த மொத்தக் கடனை சராசரி வருடாந்த சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. அதன்படி இந்நாட்டில் தனிநபர் கடன் சுமை 11 லட்சத்து 14 ஆயிரத்து 551 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான குளிரால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் 1,660 கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் நோயினால் அல்ல என்றும் பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய சீரற்ற வானிநிலை காரணமாக கடந்த 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் உள்ளடங்கலாக 1,660 கால்நடைகள் உயிரிழந்தன. திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தி அறிக்கையை வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன்படி, பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், கால்நடைகளின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை விவசாய அமைச்சரிடம் வழங்கியுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்ச்சி…
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் கொட்டுகச்சிய நவோதயா மகா வித்தியாலயத்தில் இன்று (13) பொலிஸ் தேடுதல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் பாடசாலை தொடங்கும் வரை பள்ளிக்கு வரும் மாணவர்களின் பைகள், உடைகள் சோதனை செய்யப்பட்டன. அண்மைக்காலமாக பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கொண்டு வருவதால் பாடசாலை நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை கருத்திற்கொண்டு புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 30 ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டனர். . இதன்போது பாடசாலையைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன, அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது. வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் மூன்று சிறுவர்கள் இறந்ததையடுத்து, குளிர்ச்சியான பனிப்பொழிவு தொடர்வதால், உறைந்த ஏரிகளுக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் அறிவுறுத்துமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை கிங்ஷர்ஸ்டில் உள்ள பாப்ஸ் மில் பூங்காவில் உள்ள ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இறந்தனர். ஆறு வயதுடைய நான்காவது சிறுவன் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்ட…
மனித கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதான, ஓமான் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் பிணையில் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவர், பிணையில் இன்று (13) விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஓமானில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாம் செயலாளராக பணியாற்றி ஈ.குஷான் என்பவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களில் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.