சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சம்பவத்தின் பின்னர் முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்டதன் பின்னரே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய அவர், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இக்கட்டான நிலையில் இருந்த போது எவ்வித ஆதரவையும் வழங்காத காரணத்தினாலேயே ஜனக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக தெரிவித்தார். மேலும், குறித்த தங்கம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும் தனது நண்பருக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.
Author: admin
கலால் வரி வருமானம் மார்ச் மாதத்தில் 40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும், ஆனால் உள்நாட்டு மதுபானங்களின் விலையை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதல் உள்நாட்டு மதுபானங்களின் விலை குறையும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரியில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் இந்த ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கலால் வருவாய் 30 சதவீதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். வழமையான உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நுகர்வோர் சட்டவிரோத மதுபானங்களை நாடுவதாகவும் அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்து மக்களின் சுகாதார நிலையும் மோசமடைவதாகவும் நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக நினைவு தின விடுமுறை காரணமாக தூதரகம் மூடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் என தூதரகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் அரச, தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் சுற்றாடலை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த வலியுறுத்தினார். தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ், முப்படையினர் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
New Diamond and Express Pearl கப்பல் தீ விபத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவிற்கு இழப்பீடு வழங்குமாறு இந்தியா கோரியுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானதும் பிழையானதும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (24) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இந்த அறிவித்தலை விடுத்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குறித்த போதகருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் ஆசிரிய நியமனத்திற்காக, நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் குறித்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருப்பதாக இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேலுகுமார் சுட்டிக்காட்டினார். அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என, அவர் கல்வி அமைச்சரிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய கல்வியற் கல்லூரியில் 7,800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்களில் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர். எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
பண்டாரவளை ஒபடெல்ல பாடசாலையில் இன்று காலை திடீர் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும் ஐந்து பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பாடசாலைக்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று பண்டாரவளை வலயக் கல்வி அலுவலகம் பாடசாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய நான்கு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன் பிரகாரம் எதிர்வரும் 26ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், எதிர்வரும் 29ம் திகதி பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.