ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
இளம் பெண்களை கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்ற குற்றச்சாட்டில் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை வலான குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில், விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் நால்வர், அவர்களை வாடகை வாகனத்தில் அமர்த்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரும் அடங்குகின்றனர். பிரதான சந்தேகநபர் அரகலயவின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட மொரட்டுவையை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்கும் மேற்படி நபர், நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு மூலோபாயத்தை கையாண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு பெண்ணொருவரை பொலிஸார் விலைபேசியுள்ளனர். அதனடிப்படையில் சந்தேகநபர், சனிக்கிழமை (20) இரவு நான்கு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபர், பல வருடங்களாக விபசார…
ஹம்பாந்தோட்டை – சூச்சி கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஹம்பாந்தோட்டை – சிறிபோபுர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், பொலிஸார் மேலதிக விசசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை (20) பதிவாகியுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த தினத்தில் 15 பேருக்கு கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், மூன்று உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 61 ஆகவும், இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது. மேலும், மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 16,864 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, கொவிட் தொற்றுநோய் பரவ தொடங்கியதில் இருந்து பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை தற்போது 231 நாடுகளில் 80 ஆவது இடத்தில் உள்ளது.
அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தினால் இவ்வருட அரச பொசன் பண்டிகைக்கான ஏற்பாடுகள் இல்லை என வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் தலைவர் வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் நேற்று (21) தெரிவித்தார். இந்த வருட பொசன் பண்டிகை தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர், வடமத்திய பதில் ஆளுநர் லலித் யூ கமகே உள்ளிட்ட அதிகாரிகளுடன் மிஹிந்தலை புனித பூமியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்னும் பத்து நாட்களில் நடைபெறவுள்ள அரச பொசன் விழாவை ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், கலாசார மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களம், வடமத்திய மாகாண அரச உயர் அதிகாரிகள் தவிர்த்துள்ளதாக நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நிதி முகாமைத்துவத்தின் பிரகாரம் இவ்வருடம் பொசன் பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வடமத்திய பதில் ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே தெரிவித்தார். மத்திய மாகாணத்தில் நடைபெற்ற வெசாக் பண்டிகைக்கு அரசாங்கத்திடம் இருந்து…
ஹைலெவல் வீதியின் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கொள்கலனை ஏற்றிச் சென்ற ட்ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொஸ்கமவில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், அவிசாவளையில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த கொள்கலன் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக கொள்கலன் வாகனம் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதினால் தொலைபேசி கம்பம் களனிவெளி ரயில் பாதையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக களனிவெளி ரயில் பாதையின் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் வாகனத்தின் சாரதி கொஸ்கம…
03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றையதினம் (22) நாட்டை விட்டு பயணிக்கவுள்ளார். ஐந்து நாட்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி ரணில்மேற்கொள்ளவுள்ளார். அன்கு அவர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா. ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. வரிசையில் காத்திருக்காமல் நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக கடவுச்சீட்டை பெற்றுத்தருவதாக சந்தேகநபர்கள் தலா 25,000 ரூபா வசூலித்தமை தெரியவந்தது.
சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 21 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹலவத்த தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.