Author: admin

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

Read More

பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்கு தேவையான சட்டங்களை திருத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். “டிக்கெட், இருக்கை முன்பதிவு போன்றவற்றை மூன்று மாதங்களுக்குள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவோம் என்று நம்புகிறோம். அதன் பிறகு, நீங்கள் கட்டணத்தை சரிசெய்ய வேண்டும். ரயில் கட்டணத்தை பேருந்து கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அதற்கான கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு துறையாக முடிவெடுப்பது மிகவும் கடினம். இதன் காரணமாக, அமைப்பு செயல்திறனைப் பேணுவதற்கு துறை அமைப்பிலிருந்து விலக வேண்டும். எனவே, 2001 மற்றும் 2002ல்…

Read More

கலால் வரியை அதிகரிக்கும் வகையில் நாட்டில் மதுபானசாலைகள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு மதுபானசாலைகள் மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய்கள் கலால் வரி இழப்பு ஏற்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் கலால் வரி விதித்தாலும், இந்த வரியை வசூலிக்க எந்த முறையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். “நாங்கள் கலால் வரி விதிக்கிறோம் ஆனால் வரி வசூலிக்க எந்த முறையும் இல்லை. மதுபானங்களை விற்றால்தான் கலால் வரி வசூலிக்க முடியும். மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மதபானசாலைகள் மூடப்படுவதால் பில்லியன் கணக்கான கலால் வரியை இழக்கிறோம்,” என்றும் தெரிவித்தார். மதுபானசாலைகள் இரவு 9 மணிக்கு மூடப்பட்டாலும், மதுபானம் வாங்க…

Read More

லங்கா ச.தொ.ச.வில் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று தொடக்கம் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது தற்போதைக்கு 1080 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 400 கிராம் பால் மா பைக்கற் ஒன்றிற்கு 50 ரூபா விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 1030 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது செத்தல் மிளகாய் விலை 45 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 1350 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அத்துடன் சோயாமீட், சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வௌ்ளைச்சீனி ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது அதற்கேற்ப பருப்பு ஒரு கிலோ 325 ரூபா, சோயாமீட் 660 ரூபா, பெரிய வெங்காயம் 129 ரூபா, வௌ்ளை சீனி 139 ரூபா என்றவாறு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More

அவசியமான மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மதுவரி மற்றும் புகையிலை வரிச் சட்டங்களின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான பல உத்தரவுகள் மீதான விவாதத்தில் நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 அல்லது 5 வருடங்களுக்கு முழுமையாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Read More

இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபா 37 சதம் – விற்பனை பெறுமதி 311 ரூபா 23 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 22 சதம் – விற்பனை பெறுமதி 387 ரூபா 30 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 87 சதம் – விற்பனை பெறுமதி 336 ரூபா 89 சதம் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 06 சதம் – விற்பனை பெறுமதி 231 ரூபா 78 சதம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 206 ரூபா 96 சதம் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபா 93 சதம் – விற்பனை பெறுமதி…

Read More

கனேடிய பல்கலைக்கழகத்தில் உயர் கற்கை நெறிகளிலும் தொழிற்துறைகளிலும் இணைப்பதாக தெரிவித்து சுமார் 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களான பெண் மற்றும் ஆணின் மோசடியில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தரமுல்லை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு அருகில் நபர் ஒருவர் தம்மைத் தாக்கியதாக சந்தேக நபரான பெண் மற்றும் ஆண் இருவரும் செய்த முறைப்பாட்டையடுத்து அவர்கள் மூவரையும் தலங்கம பொலிஸுக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், இந்த பாரிய மோசடித் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read More

இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலான Lu Peng Yuan Yu 028 இன் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால், 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான SLNS விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர். கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர். இதேவேளை விபத்து இடம்பெற்ற நேரம் இந்த மீன்பிடிக் கப்பலில் 38 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பாணந்துறை, கெசல்வத்த பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நிறுவன உரிமையாளர், வைத்தியர் என கூறிக்கொள்ளும் நபர் மற்றும் விபசாரத்தில் ஈடுபட தயாராக இருந்த இரண்டு பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரு பெண்களும் அகலவத்தை மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களது கைப்பைகளை பரிசோதித்த போது, ​​இருபதுக்கு மேற்பட்ட கருத்தடை உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். இந்த நிலையம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ லக்மாலுக்கு கிடைத்த உடனடி தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு மணித்தியாலத்திற்கு இரண்டாயிரம் ரூபாவிற்கு பெண் ஒருவர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல் கிடைத்ததும் காவல்துறை உத்தியோகத்தர்கள் சுற்றிவளைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.…

Read More

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்த ஹஜ் கோட்டாவை விட கடந்தாண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர். எவ்வாறாயினும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், இலங்கையர்கள் இந்த ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் முதல் குழு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது. புனித நகரமான மக்காவில் ஹஜ் செய்வது இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

Read More