அருவக்காலு குப்பைகளை இறக்குதல், குப்பைகளை ஏற்றுதல் மற்றும் குப்பைகளை சேமித்து வைக்கும் வசதி ஆகியவற்றின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதாரமான குப்பை கிடங்கு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குப்பை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் அருவக்காலு குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1200 மெற்றிக் தொன் குப்பைகளை களனி, வனவாசலையில் இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள புத்தளம், அருவக்காலு குப்பைத் தளத்திற்கு ரயில் மூலம் கொண்டு செல்வது இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். அருவக்காலு குப்பை மேடு மற்றும் களனி, வனவாசலை…
Author: admin
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன வலியுறுத்தினார். சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். விசேடமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது சிறுவர்களின் அடையாளங்கள் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது தமது நிறுவனம் தரத்தை பின்பற்றுவதாக அரச ஊடகங்களின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு ஒன்றியத்தின் அடுத்த கூட்டத்துக்கு அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்புவிடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, இந்நாட்டில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலைமையை உயர்த்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது,…
கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்த 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட ஏலக்காய் தொகையின் பெறுமதி 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பலோகம மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 39 வயதுக்குட்பட்ட மூவரே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காய் தொகை வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது சந்தேகநபர்களை இன்று(29) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இதன்படி, குறைந்தது 75 மாணவர்களாவது பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றிருந்தால், அந்தப் பாடசாலையை பரீட்சை நிலையமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏதேனும் வசதிகளை வழங்க முடியுமாயின், அதற்காக அடுத்த சில நாட்களில், நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இன்று (29) ஆரம்பமான 2023 ஆம் ஆண்டுக்கான…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜையை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அவரை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, குறித்த சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார். இதன்போது, குறித்த மனுவை மீள பெறுவதாக சீன சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
மின்னேரிய – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய புகையிரத நிலைய சந்தியில் ஒரே திசையில் பயணித்த இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹிகுராக்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த வேன் ஒன்றும், அனுராதபுரத்திலிருந்து சோமாவதியை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
அமெரிக்கத் தலைவர்கள் ஒரு தற்காலிக கடன் உச்சவரம்பு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் திங்களன்று (29) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 66 சென்ட் அல்லது 0.9% உயர்ந்து 77.61 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அதே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 75 சென்ட் அல்லது 1% ஆக உயர்ந்து 73.42 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் சனிக்கிழமையன்று 31.4 டிரில்லியன் டொலர் கடன் உச்சவரம்பு மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்க செலவினங்களை நிறுத்துவதற்கான கொள்கை அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று இரு தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றமை, உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டமை போன்ற காரணிகளின் அடிப்படையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இன்று 22 கரட் தங்கத்தின் விலை 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 163,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 165,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேல் மாகாணத்தில் பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெளிவுபடுத்திவுள்ளது. இது தொற்றுநோய் அளவை எட்டவில்லை என சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது. தேவையற்ற பீதி தேவையில்லை எனவும், அமைதி காக்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல, வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வைரஸ் நோய் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனவும்அவர் பொதுமக்களுக்கு மேலும் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பன்றி இனத்தின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் மாத்திரமே கவனம் செலுத்தப்படுகிறது. டிஆர்ஆர்எஸ் எனப்படும் வைரஸ் நோய், பன்றிகளின் சுவாச மண்டலத்தை முதன்மையாக பாதிக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தாலும், வைரஸை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.