செல்லுபடியாகும் விசா காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாகமிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை திருத்துவதற்கான குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகள் மூலம் வீசாக் காலப் பகுதியை நீடித்துக்கொள்ளாமல், செல்லுபடியாகும் வீசாக் காலம் முடிவடைந்து 07 நாட்கள் அல்லது அதற்கு குறைந்த காலத்தில் வெளியேறும் போது அதற்காக தண்டப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கும், மிகை தங்கியிருப்புக் காலம் 7 நாட்களுக்கு மேல் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலப் பகுதிக்கு 250 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும் மிகை தங்கியிருப்புக் காலம் 14…
Author: admin
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலய எசல திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. இந்த காலப்பகுதியில், எசல திருவிழா காலத்தில் திருவிழா நடைபெறும் இடத்தை மதுவற்ற பகுதியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண கலால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வெளியில் இருந்து மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, கதிர்காம பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் குற்றச் செயல்கள், மதுபான குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 1913 என்ற விசேட…
இலங்கையில் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி உணவுப் பொருட்களில் கனரக உலோகப் பரிசோதனையே கட்டாயமாக்கப்படுவதாக தெரியவருகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கருவாடு, நெத்தலி உள்ளிட்ட சில உலர்த்தப்பட்ட மீன் வகைகளில் கனரக உலோகங்கள் மற்றும் ஆசனிக் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சில பழ வகைகளிலும் கனரக உலோகமான ஈயம் அதிகளவில் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு நடத்திய தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் சட்டங்கள் எவ்வளவு இறுக்கப்படுகிறதோ அதை விட அதிகமாக கடத்தல்கள் இடம்பெறும் என இராணுவ ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், டிரான்சிஸ்டில் வருபவர்களை பார்க்கும் போது உதாரணமாக பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நபரொருவர் டிரான்சிஸ்டில் இலங்கைக்கு வந்து இறங்கி 2 – 3 மணித்தியாலங்களுக்குள் ஐரோப்பிய நாடொன்றிற்குள் செல்லும் வகையில் வருகிறார். எனினும் அந்த இடங்களில் கடவுச்சீட்டு மாற்றப்படுகிறது. மற்றைய கடவுச்சீட்டு கிழிக்கப்படும். சில இடங்களில் தெரிந்து நடக்கிறது, சில இடங்களில் தெரியாமல் நடக்கிறது, சில இடங்களில் ஒத்துழைப்புடன் நடக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்கே, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 30 மே 2023 இல் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் முதல் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள், மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவசரமாக இறக்குமதி செய்வதற்கு இந்த கடனுதவி…
தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டதன் மூலம் தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை உள்ளடக்கிய உள்ளுர் ஊடக நிறுவனம் ஒன்றின் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார். பல ஒன்லைன் செய்தி இணையதளங்கள் சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வதாகவும் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிராம சேவையாளர்களுக்காக நிலவும் வெற்றிடம் காரணமாகவே, இந்த வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலை வீடுகளுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணிகள் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கடும் வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளியால் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால் மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (30) அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக சூரிய ஒளியுடன் உடலில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் விழுவதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.