அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும், டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Author: admin
உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயேஸ் பெரேராவின் உடலம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பிரதேச செயலாளரை கடமை நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக உத்தியோகபூர்வ காரில் பிரதேச செயலாளர் வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அவரது சாரதி சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்போது, குறித்த சாரதி அவரது சடலம் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் ஏனைய உத்தியோகத்தர் மற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அறிவித்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரணித்தவரின் உடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அகலவத்த பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டில் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மகளே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக அகலவத்த பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர். கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. வட்டிக்கு பணம் கொடுக்கும் குறித்த முதலாளி, சிறுமிக்கு தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில் அந்த தொலைபேசி சின்னமாவின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமானது. அந்த சிறுமி, தன்னுடைய மாமாவினால் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தேகநபரான தந்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும் மாமாவும் பிரதேசத்தில் இருந்து…
அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) இரவு முதல் மக்கள் எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடிரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் கான முடிகின்றது. மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, தற்போதைய பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கான ஆதரவைப் பெற்று கொள்ளும் விதமாக வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை விளக்கியிருந்தார். ஜப்பான் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, இடைநிறுத்தப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்துவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
டொலரின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மருந்துகளின் விலையை மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி டொலரின் விலையுடன் ஒப்பிடுகையில் மருந்துப் பொருட்களின் விலை குறைந்தது 15% குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இந்த நோக்கத்திற்காக கலந்து கொண்டனர். டொலர் ஒன்றின் பெறுமதியான 190.00 ரூபா 370.00 ரூபாவை ஒப்பிடுகையில் மருந்தின் விலை குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு போன்ற காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் நாட்டில் உள்ள அப்பாவி மக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.…
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் கடன் அட்டை பயனாளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து, 52 ஆயிரத்து 991 ஆக காணப்பட்டது. எனினும், இந்த வருடத்தின் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் அட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 39 ஆயிரத்து 541 ஆக குறைவடைந்துள்ளது.
ஒப்பீட்டளவில் மழை குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீளவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது. இது தொடர்பில் செயலாளர் இந்துனில் போபிட்டிய தெரிவிக்கையில்,அடுத்த இரண்டு மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் மாதம் வரை இலங்கை இந்த நிலை தொடரும் என்று கூறினார்.“இயற்கையில் ஏடிஸ் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வாரங்கள். நுளம்பு அதன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும், ஒவ்வொரு முறையும் சுமார் 100 முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சூழலில், நாட்டில் கண்டறியப்படாத இனவிருத்தி செய்யும் இடங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் அதிக நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்” என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே, டெங்குவைத் தடுக்கும் வகையில் மக்கள் தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு பொபிட்டிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார். இந்த நெருக்கடியான காலப்பகுதியில் இலங்கைக்கு சீனாவின் அசைக்க முடியாத ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீன துணைஅமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய துணை அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங்கின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும்…
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் ஜோடி கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) மாலை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.