Author: admin

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக அவர் குறிப்பிட்டார். புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

வடக்கு, கிழக்கு தழுவிய பகுதிகளில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட டிப்பொவுக்கு சொந்தமான அரச பஸ் ஒன்று இன்று (25) அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பஸ் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பஸ்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

முட்டை இறக்குமதி செய்வது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அடங்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மேலும் 02 மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தில் உள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கு தேவையான அறிக்கை நேற்று(24) வரை கிடைக்கவில்லை என வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் இருந்து இதுவரை 05 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறையின் சில பகுதிகளில் இன்று(25) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, மொரன்துடுவ, போம்புவல, பிளமினாவத்தை, தர்கா நகர், பெந்தோட்டை, அளுத்கம, களுவாமோதர மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் இன்று(25) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Read More

நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதாகவும், இது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார். எனவே, இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்கும் வகையில், விரிவான சுற்றுலா மேம்பாட்டு மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read More

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் 316,619 மில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், வருவாய்த் திணைக்களம் 146,565 மில்லியன் ரூபாவை வசூலித்திருந்தது. இதன்படி, கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 216 வீத அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் படிப்படியாக மீட்சியடைந்தமை மற்றும் வரி நிர்வாகத்தின் வினைத்திறன் அதிகரிப்பு என்பன வரி வருமானத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

நாளை ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது. நாம் ஹர்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்’ என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத் தலைவர் ந.சற்குணராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

Read More

வடக்கு – கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலர் ஜெயராஜ் குலேந்திர வொல்வின் தெரிவித்ததாவது:- கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விளைவுகளை நாம் முழுமையாக அனுபவித்துள்ளோம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சார்பாக ஆதரவை வழங்குவதோடு ஒவ்வொரு ஆசிரியரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி வலுச்சேர்க்குமாறு கோருகின்றோம் என்றார்.

Read More

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்புக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு பாடசாலைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு இனி வழங்காது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More