பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மு.ப 9.30 மணிக்கு ஆரம்பிக்கவும், மதிய பேசான இடைவேளையை பி.ப 12.30 மணி முதல் பி.ப 1.00 மணிவரை அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய பாராளுமன்றம் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதுடன், எதிர்க்கட்சி கொண்டுவரும் மின்சாரக் கட்டண அதிகரிப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை அன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லையாயின் அச்சட்டமூலம் குறித்த விவாதத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 30,…
Author: admin
இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயோமெட்ரிக் தரவுகள் “தற்போது, தேசிய அடையாள அட்டையைப் பெற பொதுவான தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பயோமெட்ரிக் தரவுகளை இனிமேல் அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக, நமது கைரேகைகள், இரத்தம் தொடர்பான விபரங்கள், கண் தரவுகள் ஆகியவற்றையே பயோமெட்ரிக் தரவு என்கிறோம். புதிய நடைமுறை எதிர்காலத்தில், இந்த பயோமெட்ரிக் தரவை சேர்த்து தேசிய அடையாள அட்டையை வழங்கத் தொடங்குவோம். தற்போது, இது இந்திய உதவியின் கீழ் உள்ளது, இப்போது அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாங்கள் அனைவரும் மீள் பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டொயோட்டா லங்கா, கொரோலா மற்றும் யாரிஸ் வாகனங்களுக்கு பயணிகள் பக்க ஏர்பேக்கை மாற்றுவதற்கான அறிவித்தல். ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம், கரோலா 141 மற்றும் யாரிஸ் வாகனங்களில் முன்பக்க பயணிகள் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்களை மாற்றுவதற்கான விளம்பரத்தை தொடங்கியுள்ளது. காற்றுப்பையை மாற்றுவதற்கு தகுதியுடைய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள டொயோட்டா லங்கா சேவை மையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாற்றீடு இலவசமாக செய்யப்படும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை செல்லும் சிறுமிகளின் தற்கொலை எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இளவயது கர்ப்பகாலத்தின் எண்ணிக்கை குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 இல் வெளியிடப்பட்ட இலங்கையின் கிராமப்புறங்களில் இளம் பருவத்தினரின் கர்ப்பம் பற்றிய ஆய்வுக் கட்டுரையான Rajarata Pregnancy Cohort புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 2015 இல் 5.2 சதவீதத்திலிருந்து 2019 இல் 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகக் கூறியது.
நிறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரையில் உள்ள இரத்தக் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும். குறைமாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த வளர்ச்சி முழுமையடைவதில்லை. கண்களின் வளர்ச்சியும் முழுமை அடைவதில்லை. தேவையற்ற இரத்தக் குழாய்கள் உருவாகும். அதன் விளைவாக விழித்திரையில் இரத்தக் கசிவும் விழித்திரை விலகலும் நிரந்தரமாக பார்வை பறிபோதலும் நிகழலாம். எப்படி கண்டுபிடிப்பது? குழந்தை குறைமாதத்தில் பிறந்தாலோ, 2 கிலோவுக்கும் குறைவான எடையுடன் இருந்தாலோ, அந்தக் குழந்தையை குழந்தை நல மருத்துவர்கள், கண் சிகிச்சை நிபுணர்களிடம் பிறந்த ஒரு மாதத்துக்குள் காண்பிக்க வேண்டும். சில குழந்தைகள் பிறந்து ஒரு மாதமாகியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் கண் சிகிச்சை நிபுணரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று குழந்தையின் கண்களை பரிசோதிக்கக்கூடும். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும் கண் மருத்துவர் சொல்லும் இடைவேளைகளில் குழந்தையின் கண்களை பரிசோதிக்க வேண்டும். பெண்கள் பத்து மாதங்கள் முடிவதற்குள்ளேயே குழந்தை பெறுவதற்கு காரணம், கர்ப்ப…
சமஷ்டி என்பது தனிநாடு அல்ல. அது சிறந்தவொரு ஆட்சி முறையாகும். ஜனநாயகத்தை முறையாக இதன்மூலம் பேண முடியும். அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உண்மையாக செயற்பட்டிருந்தால் 2002ஆம் ஆண்டில் கைச்சாத்திட்ட ஒஸ்லாே ஒப்பந்தத்தை செயற்படுத்தவேண்டும் என தமிழ் மக்கள் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியமானது என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்ட கால பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அவர்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். 2001 ஆம்…
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வாயோதிப பெண் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதுடன், ஒரு பிள்ளை வெளியூரில் வசித்து வருகின்றார். அந்நிலையில் வயோதிப பெண் தனது வீட்டில் தனியே வாழ்ந்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவரது சகோதரன் வழமை போன்று இன்றைய தினம் உணவு கொடுக்க சென்ற நிலையில் சகோதரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், உனவடுன, தரம்பவில் உள்ள தேவாலயத்தின் பூசாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். காலி மற்றும் கொழும்பில் 09 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட 9 சிறுவர்களை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காலி பிரதேசத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார். குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கோட்டாபய ராஜபக் அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/- என்றும், 1 கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1300/- என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். அதேவேளை, இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என அமைச்சர் நலீன் பெர்னாண்டோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.