Author: admin

விலையை நிர்ணயிக்க முடியாத வகையிலான வலம்புரிச் சங்கொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் விலங்கு தள உதவியாளர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ அரச பண்ணைக்கு அருகில் கொடகலான-லோலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வலம்புரி சங்கினை ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக வெலிசர கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீரிகம பொலிஸ் நிலையத்தின் இரவு நேர நடமாடும் ரோந்து குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வலம்புரிச் சங்கு வனஜீவராசி அதிகாரியிடம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகி வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 15 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினர் இவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

Read More

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பயணாளர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேஷன் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்றது. ரஹ்மத் பவுண்டேஷனுடன் YWMA மற்றும் CSMWA பேரவையும் இணைந்து செயற்பட்ட இத்திட்டமானது மறைந்த மாமனிதர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வர்த்தக வானிபத்துறை அமைச்சருமாகிய ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் மனைவியும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தாயாருமான சுஹாறா மன்சூர் அவர்களினால் ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் குறித்த பயனாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

2022ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களினால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறித்த பெற்றோர்கள் குற்றம் சுமத்தி இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.

Read More

இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு விற்றதாக சந்தேகிக்கப்படும் மலேசிய தம்பதியரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்தோ ரஸ்லின் தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு 30,000 முதல் 50,000 யூரோக்கள் (இலங்கை ரூபாய் 10543312 – 17572187) வரையில் தம்பதியினர் வசூலித்துள்ளதாக ரஸ்லின் குறிப்பிட்டுள்ளார். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட மலேசியப் பெற்றோரை, தங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழுடன் கடவுச்சீட்டுகளை உருவாக்க குடிவரவுத் துறைக்கு வருமாறு தம்பதியினர் வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வரும்போது, ​​அவர்களின் பிள்ளைகளுக்குப் பதிலாக சம வயதுடைய இலங்கைப் பிள்ளைகளை புகைப்படம் மற்றும் கைரேகை எடுக்க முன்வைத்து பின்னர் வெற்றிகரமாக கடவுச்சீட்டு பெறும் இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச் செல்வதாக குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம். டத்தோ ரஸ்லின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 12ஆம் திகதி கோலாலம்பூர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு குழந்தையுடன் வந்த தம்பதியிடம் அதிகாரிகள் விசாரணை…

Read More

மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை 39°C – 45°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (21) வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். வீடுகளில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, வெப்பநிலை அதிகரித்திருக்கும் போது நீங்கள் வெளியில் வேலை செய்யும் நபராக இருந்தால், நீங்கள் கடுமையான நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டும். மேலும், வெளியில் வேலை செய்பவர்கள் நிழலில் தங்கி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் பணியிடத்தில் இருந்தால், நிறைய தண்ணீர் குடித்துவிட்டு முடிந்தவரை நிழலில் ஓய்வெடுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Read More

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். அதன்படி, முஸ்லிம்கள் செறிவாக வாழும் மாகாணங்களில் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பல் இன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவுள்ளதாகவும், மல்வத்து தேரர் கூட இச்சட்டம் மிகவும் பயங்கரமான சட்டம் என குறிப்பிட்டுள்ளார் எனவும், அந்த அறிக்கையை தானும் ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரும் அரச மிருகத்தனம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் இந்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிப்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கமாக அமைந்துள்ளதாகவும், இந்நோக்கத்தை முறியடிக்க அனைத்து முற்போக்கு சக்திகளையும் திரட்டி வருவதாகவும், பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை போற்றும் அனைவரும் இணைந்து இதனை முறியடித்து பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் அமுல்படுத்தவுள்ள இந்த சர்வதிகார எதோச்சதிகார சட்டத்தை முற்றாக தோற்கடிக்கத் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று விசேட அறிவிப்பொன்றை…

Read More

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடி மற்றும் மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அதனால் ஏற்படகூடிய பாதிப்பினை தவிர்த்துக்கொள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More