இத்தாலி நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுப்படியான சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வசித்து வரும் மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இலங்கை மக்களுக்கு இதுவரை சிக்கலாக இருந்து வந்த சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்க இலங்கைக்கான இத்தாலி தூதுவர் ரீட்டா மனேல்லா இணங்கியதாகவும் நீதியமைச்சு கூறியுள்ளது. இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் கோரிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இத்தாலி தூதுவருக்கு அனுப்பியிருந்தார். இதன் பிரதிபலனாக இந்த அனுமதி கிடைத்துள்ளது. இலங்கைக்கான இத்தாலி தூதுவருக்கும் நீதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நீதியமைச்சில் நடைபெற்றது. இதன் போது இலங்கையில் வசிக்கும் இத்தாலிய பிரஜைகளுக்கும் தமது நாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை இங்கு பயன்படுத்த இலங்கை அரசு அனுமதியை வழங்க வேண்டும் என தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தாலி மற்றும் இலங்கை இடையில் இருந்து வரும் ராஜதந்திர மற்றும்…
Author: admin
பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிக வரி சுமை காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,163 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் நெருக்கடி நிலைதோன்றியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதன்படி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் போது 8,540 விரிவுரையாளர்கள் இருந்தனர். இருப்பினும் நேற்று புதன்கிழமை 31 ஆம் திகதி 6,673 விரிவுரையாளர்கள் மாத்திரமே உள்ளனர். 5 மாதங்களில் 1,163 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது பாரதூரமான நிலைமையாகும். எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகளவிலான மூளைசாலிகள் வெளியேற்றமாகும். மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு சிரமத்துக்கு மத்தியிலேயே புலமை பரீட்சில் மூலமே கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றனர். புலமைப்பரிசில் மூலம் வாழ முடியாதளவுக்கு உணவுகளின் விலைகள் காணப்படுகின்றன. 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவின்றியே பாடசாலைக்கு செல்கின்றனர். நாட்டிலுள்ள 72 இலட்சம் மக்கள் உணவினை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். 95 வீதமானவர்கள் போசாக்கான உணவினை…
ரிதிமாலிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கசிப்பு காய்ச்சி விற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் கலால் திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின் பிரகாரம் மதுபான பாவனை சடுதியாக குறைந்து, கசிப்பு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத மதுபாவனைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில், ரிதிமாலிய பகுதியில் கசிப்பை காய்ச்சி அதனை விற்பனைச் செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் லீற்றர் கைப்பற்றப்பட்டது. கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் கடந்த 29ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்ட நிலையில், காய்ச்சியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, வடிக்கட்டிய 5,000 லீற்றர் கசிப்புடன் அந்த ஆசிரியரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மனைவி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணியாற்றுகின்றார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘நமய செங்கவுனு கதாவ’ என்ற புத்தகத்தின் கதவு திறப்பு விழாவில் விமல் வீரவங்ச ஆற்றிய உரையில், தம்மைப் பற்றிய பல அவதூறான விடயங்களை கூறியதாக ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் தம்மைப் பற்றி பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் சில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா வரையில் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர் கடன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் மீள செலுத்தப்படும் என மத்திய வங்கி இன்று அறிவித்தது. மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்க மதிப்பை எட்டலாம் எனவும் நம்பிக்கை வௌியிட்டார். மத்திய வங்கியின் நாணய சபை நேற்று கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, SDFR எனப்படும் மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை…
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அந்த ஆசிரியர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என்று வடமத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் (பரீட்சை) எஸ்.ஆர் பரியங்கர தெரிவித்தார். இந்த ஆசிரியர் அந்தப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர், தன்னுடைய தனியார் வகுப்புகளுக்கு வருகைதந்த மாணவர்களுக்கே விடையளிப்பத்றகு இவ்வாறு ஒத்துழைப்பு நல்கினார் என ஏனைய மாணவர்களின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவ்வாசிரியர் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கண்டி, குண்டசாலை நீர் விநியோகத்திட்டத்தில் அசுத்த நீர் கலப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து அதனை நேரில் கண்டறிய மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே அதிகாரிகள் சகிதம் நேற்றுமுன்தினம் அங்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது தும்பறை சிறைச்சாலையின் கழிவு நீர் கலக்கப்படுவதையும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் கழிவு நீர் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரச மற்றும் தனியார் துறையினர் எப்போதும் உள்ளூராட்சி சபைகளின் சட்டதிட்டங்களுக்கு இணங்கி நடக்கவேண்டும் என்பதையும் ஆளுநர் வற்புறுத்தினார்.
ஆரையம்பதியில் உள்ள இலங்கை வங்கிக்கிளை பணத்தை திருடர்கள் கொள்ளையிட முயற்சித்த சம்பவமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரும்பு உபகரணங்கள் , அலவாங்குகள் கொண்டு வங்கியின் கதவை திருடர்கள் உடைத்தபோதும் , அங்கு பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை ஒலிச் சத்தம் காரணமாக அக்கம் பக்க மக்கள் திரண்டதால் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரிப்புக் காரணமாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுகளை உட்கொள்வதில் அவதானம் தேவையென சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பெற்றோர் தமது குழந்தைகளின் போஷாக்கு குறித்து அக்கறைகொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்கள் ஆபத்தை விளைவிக்க லாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி நயனா மகோத ரத்ன ஊடகங்களுக்கு நேற்று (31) கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போல உணவு வகைகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும். பச்சை சிறந்த தெரிவாகவும் மஞ்சள் அவதானத் தெரிவாகவும் சிவப்பு கட்டுப்பாட்டுத் தெரிவாகவும் கொள்ள வேண்டும். பச்சைவகை உணவுகள் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்கள். மஞ்சள் உணவு, பானங்களைத் தெரிவுசெய்யும்போது அவதானம் தேவை. அத்துடன் சிவப்பு நிற உணவு, பானங்கள் அவசியமற்றவை. அவற்றைக் கட்டுப்பாட்டுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் பல பாகங்களிலும்…