கடந்த 2022 வருடம் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரையில் மின் கட்டணம் செலுத்தாத மின் பாவணையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிவித்தல்கள் 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் தரவுகளின் படி, கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை செலுத்தாத 253,465 பாவணையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மின்பாவணையாளரின் எண்ணிக்கை 408,189 ஆக உள்ளது. அதன்படி, மின்கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் சிவப்பு அறிவித்தல் விடுப்பது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Author: admin
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹம்ச தெரிவித்தார். அனுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இன்று முதல் 12 விசேட புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே. இண்டிபோலேஜ் தெரிவித்தார்.
05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு நிலையை சரிபார்க்க நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு ஆரபிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை என்பன பரிசோதிக்கப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார். குடும்ப சுகாதார அதிகாரிகளால் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு கணக்கெடுப்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15.3% எடை குறைந்த குழந்தைகள் என கண்டறியப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளன. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் புகழ் ஆடை பிராண்டுகள் என்ற போர்வையில் தரம் குறைந்த ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த ஆடைக் கடையில் நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனை நடத்தியது. புறக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் இருந்து ஆடை பொருட்களை மற்ற கடை உரிமையாளர்களுக்கும் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு விநியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த கடைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் நேற்று (ஜூன் 01) இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை 31ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை அவதானிக்க முடிந்தது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என குழப்பமடைய வேண்டாம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். குறைந்தபட்ச கையிருப்பை 50 வீதமாக பராமரிக்கத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை மீள்பரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அலுபோமுல்ல குருச சந்தி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பல்பொருள் அங்காடிக்கு வந்து கைப் பையில் பல பொருட்களை திருடிக்கொண்டு, ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பணம் செலுத்தியதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களை சோதனை செய்ததில் தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்து திருட்டில் ஈடுபட்டமை தெரியவந்தது. கடைக்கு முன்பாக நின்ற மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியதுடன், சந்தேகநபர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலும் பொருட்களைத் திருடியதற்காக புளத்சிங்கள பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தம்பதிகள் அவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்…
# போலித் தகவல்களை பரப்புபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிச் செல்லும் போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது. அவ்வாறான போலித் தகவல்களை பரிமாற்றுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிறார்கள் கடத்தப்படவுள்ளதாக அண்மைய சில நாட்களாக கிடைக்கப்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, போலியானவை என கண்டறியப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிறுவர்கள் கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பாக, அவசியம் என கூறி காவல்துறை எந்த ஒரு நபரைப் பற்றியும் தகவல் வெளியிடவில்லை. இதன்காரணமாக அவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேநேரம், அவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கோரியுள்ளது.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “Tax File “ திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர்கள், என்ஜினியர்கள், வழக்கரிஞர்கள் உள்ளிட்ட 14 துறைசார்ந்தவர்கள், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மோட்டர் சைக்கிள் திரீவீலர் சிறு டெக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்களை தவிர, மற்றைய அனைத்து வாகனங்களை வைத்திருக்கும் வானக உரிமையாளர்கள் அனைவரும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும்.