அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் மறவையொட்டியே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார பீடத்தின் போதே இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 2022ம் வருடம், டிசம்பர் மாதம் இடம்பெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டின் போதே, வை.எல்.எஸ். கட்சியின்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் சுமார் 08 வருடங்களாக சுபைர்தீனே செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
Author: admin
சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், பல்வேறு முரண்பாடுகளுக்கு அடிப்படையான அறிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான விடயங்கள் காரணமாகவே பல்வேறு முரண்பாடுகளுக்கு அடிப்படையான உண்மைகள் மற்றும் இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் மதங்களை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்களின் அடிப்படையில் சமூகத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்…
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி இரவு 23 வயதான இளைஞன் ஒருவரை குறித்த சந்தேகநபர் துரத்தி சென்று வாளால் வெட்டியுள்ளார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதனால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது.
இவ்வருட ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள 162 இலங்கை ஹஜ் விண்ணப்பதாரிகளில் 35 பேருக்கே சவூதி அரசாங்கம் ஹஜ் கடமைக்கான அனுமதியினை வழங்கியுள்ளதாக அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கைக்கு வழங்கியுள்ள 3500 ஹஜ் கோட்டாவில் இது 1 வீதமாகும். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்களைக் கொண்டுள்ள 162 விண்ணப்பதாரிகளில் கணவரோ அல்லது மனைவியோ வெளிநாட்டவராக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழு எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை எமிரேட்ஸ் விமானம் மூலம் சவூதி அரேவியாவை நோக்கி பயணிக்கவுள்ளது. இக்குழுவில் 62 பேர் அடங்கியுள்ளனர். அத்தோடு ஹஜ் கடமையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை யாத்திரிகர் குழு எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு திரும்பவுள்ளனர். இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள், ஹஜ் முகவர்களுடன் உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திட்டு பயணமாவதால் யாத்திரிகர்களுக்கு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள சேவைகள், ஹோட்டல் வசதிகள்…
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்.நகரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடைப்பூட்டியதன் காரணமாக உரிமையாளர் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறே தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் 3 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என சிவில் சமூக குழுவான “மார்ச் 12 இயக்கம்” நான்கு அம்ச அறிக்கையில் தெரிவித்துள்ளது. அலி சப்ரி ரஹீம், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில்,“மார்ச் 12 இயக்கம்” இதனை தெரிவித்துள்ளது. மார்ச் 12 இயக்கம், எம்.பி.யின் முந்தைய பயணங்களை அவர் இதேபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தது. பாராளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்தும் அந்த இயக்கம் கவலை தெரிவித்ததுடன், சட்டத்தின்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அதிகபட்ச தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த மார்ச் 12 இயக்கம், எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் இன்னும் அறிக்கை…
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையம் (CPSTL) ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலதிக நேரச் செலவுகளைக் குறைப்பதற்காக கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் CPC மற்றும் CPSTL இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைய விலை திருத்தத்தின் போது விலை குறைப்பு எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒடர்களை வழங்காமையால் தற்போது பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். “எரிபொருள் நிலையங்களில் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தத்தின் பின்னர் நுகர்வோரின் உடனடி தேவை அதிகரித்தது மற்றும் எரிபொருள்…