70 சதவீதமான மலையக மாணவர்களின் பெற்றோருக்கு பெருந்தோட்டங்களில் தொழிலில் ஈடுபடாதுள்ளமையால், அவர்களின் பிள்ளைகளுக்கு ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஸ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கு தகைமைபெறும் மலையக மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களின் ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய இலக்கங்கள் அவசியமாகும். இந்நிலையில், மலையகத்தில் தற்போது 30 சதவீதமானோர் மாத்திரமே பெருந்தோட்டங்களில் தொழில்புரிகின்ற நிலையில், 70 சதவீதமானோர் பெருந்தோட்டங்களில் தொழிலில் ஈடுபடுவதில்லை. இதன்காரணமாக, குறித்த 70 சதவீதமான பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகின்றது. இந்நிலைமையை கருத்தில் கொண்டே, பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடாத பெற்றோர்களை உடைய மாணவர்களை கல்வியல் கல்லூரிக்குள் அனுமதிக்க, அவர்களின் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரின் ஊழியர் சேமலாப நிதிய இலக்கத்தை பயன்படுத்தலாம் அல்லது குறித்த மாணவர்கள் பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்றிருந்தால் அவர்களை…
Author: admin
நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது.. இந்த வார இறுதியில் காலாவதியாகவிருந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருகிறது. கடந்த ஜூலை 18 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் ஜுலை 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனப்படி எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியாகின்றது. அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் ஒரு மாத காலம் பூர்த்தியாகும் முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவினால் கடனுதவி அடிப்படையில் இவ்வாறு பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார். முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்தது 100 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வணிகப்பதிவு எண்களின் கீழ், ஒன்று அல்லது பல கைப்பேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, http://fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து, வணிக பதிவு எண் (BRN) வகையின் கீழ், முதலாவது வாகனத்தைப் பதிவு செய்யலாம். அதன்பின் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணின் சுயவிவரத்தில் உள்நுழைந்து, ‘Add’ என்பதை அழுத்துவதன் மூலம் தமது வணிகத்துக்குரிய மேலும் பல வாகனங்களை சேர்க்க முடியுமென இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA தெரிவித்துள்ளது.
ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண் 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலகத் தமிழ் மன்றம், பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ் (ATC), தமிழீழ மக்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை 2021 இல் பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் எனவும் அது தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கொழும்பில் இருந்து காலி வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காற்றானது மணிக்கு 20-30 கி.மீ தென்மேற்கு திசையில் வீசும் எனவும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ…
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வாரம் முதல் மீண்டும் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வந்துள்ள கச்சா எண்ணெய்யை இறக்கியதன் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றிரவு (13) தீவை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் அதன் மாதிரிப் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 120,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் ஆகஸ்ட் 23 மற்றும் 29 ஆம் தேதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடைய உள்ளது. இவற்றின் அடிப்படையில், அடுத்த வார நடுப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் வசித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் காணப்பட்ட துப்பாக்கி உயிரிழந்த குறித்த நபருடையது என பொலிஸாருடைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (14) நள்ளிரவு முதல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை அல்லது QR முறையின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்படுகின்றது. கடந்த வார தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் தேவையான மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதம் முதல் தேதியிலிருந்து வாகனங்களுக்கான எரிபொருள் QR முறையின்படி வழங்கப்பட்டது. இந்த முறை எரிபொருளுக்கு காத்திருந்த நீண்ட வரிசைக்கு தீர்வு தந்தது. இதேவேளை, QR முறைக்கு வெளியே எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் வெளியீடு குறித்த தரவுகளை சரிபார்த்து, சட்ட விரோதமாக எரிபொருளை விநியோகித்த எரிபொருள்…
சுங்க அதிகாரிகளாக காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும், இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின் (31) மற்றும் செல்லையா அரவிந்தன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த 47 வயதான நதிஷா ரோஷினி என்பவரை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், பொலிசாரிடமும் சென்று புகார் அளித்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.