அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Author: admin
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று (16) திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரள, விமல வீர திஸாநாயக்க, பிரதான செயலாளர் M.P.S திஸாநாயக்க உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (16) அழைக்கப்பட்ட போதே இந்த கோாிக்கை முன்வைக்கப்பட்டது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, 2017ஆம் ஆண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினாா். இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது , பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதுடன், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி, இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி மீண்டும்…
இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாடுகள், அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவீடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த இதுவரை உரிய பொறிமுறையொன்று இல்லையென்றும், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே தலைமையில் கூடிய இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஒன்லைன் தளங்களின் ஊடாக வர்த்தங்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் வரிகளைச் செலுத்தாது பெருமளவு பணத்தை வெளிநாட்டிலுள்ள தமது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக் கொள்வது இங்கு தெரியவந்தது. இதற்கமைய இணையத்தை அடிப்படையாகக் கொண்டு வணிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு சம வர்த்தக சூழலை…
தாடி வைத்திருந்தமைக்காக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு பீடத்தைச் சேர்ந்த மாணவன் நுஸைக் இரண்டு விரிவுரையாளர்களால் தாடியை வழிக்கும் வரைக்கும் விரிவுரைகளுக்கு வரமுடியாது என்றும் எதிர்வரும் பரீட்சையை எழுதமுடியாதென்றும் அறிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்ற முதலாம் திகதி முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். சென்ற 13ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட இம்முறைப்பாட்டில் பல்கலைக்கழகம் சார்பாக பீடாதிபதி மட்டும் பிரதி துணை வேந்தர் ஆஜராகியிருந்தனர். குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான சட்டமுதுமானி முகைமின் காலித் மற்றும் சட்டத்தரணி உவைஸ் ஆகியோர் மாணவன் நுசைக் சார்பில் ஆஜராகியிருந்தனர். விசாரணை இறுதியில் மாணவனை தாடி வைத்தவாறே பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் பிரதிவாதிகள் பீடக் கூட்டத்தில் முடிவெடுத்தே சொல்ல வேண்டும் என்று பதிலளித்திருந்தனர். எதிர்வரும் திங்கட்கிழமை (19) மாணவனைப் பரீட்சை எழுத நிர்வாகம் அனுமதிக்காது என்ற…
ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்குத் தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி (Low level Road) புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரைகளை விடுத்தார். வெளிநாட்டு உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முழுமையான வீதியின் நீளம் 7.7 கி.மீ ஆகும். 2023 மே மாத நிலவரப்படி, இதன் முதல் கட்ட நிர்மாணப் பணிகளின்…
உஸ்வதகேயாவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் நுகர்வுக்குத் தகுதியற்ற சுமார் 4000 கிலோகிராம் நிறமுடைய பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கலர் பருப்புகளை உரிய தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் வைத்து சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையின் அவசர சோதனை பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவற்றின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்ட பிறகு, தொழிற்சாலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி குறித்த யோசனையை நடைமுறைப்படுத்த முடியாதென இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் கூறியுள்ளார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள மின்சார கட்டணங்கள் மாற்றமின்றி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாத பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணங்களை குறைக்க இலங்கை மின்சார சபைக்கு முடியுமான போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைக்குழுவின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவ வழங்கற் பிரிவு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், ஆயுர்வேதத் திணைக்களம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் மருந்து விநியோகத்தின் போதான சவால்கள், வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகள், மருந்துப்பொருட்களின் தர உத்தரவாதம், மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம், மருந்துகளின் பற்றாக்குறை, ஆயுர்வேத திணைக்களத்தில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகள் முன்வைப்புக்களை (Presentation) மேற்கொண்டனர். அத்துடன் பாரம்பரிய மருத்துவ முறையின் ஊடாக இலங்கையில் சுகாதார சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக காணப்படும் சந்தர்ப்பங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்…
நாடளாவிய ரீதியில் தனியார் வகுப்புகளை நடாத்தும் தனியார் ஆசிரியர்களின் தரம் குறித்து கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், அந்த ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் தரம் குறித்து சமூகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் தொடர்பிலும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. அதன்படி, தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே சிறந்தது என கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு பரிந்துரைத்தது. ஏனைய நாடுகளில் தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் (Teaching License) வழங்கப்பட்டு அந்தத் தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்ததுடன், இலங்கையிலும் அவ்வாறானதொரு முறையைப் பின்பற்றுவது பொருத்தமானது என குழு மேலும் பரிந்துரைத்தது. எனவே, இவ்வாறானதொரு முறையைத் தயாரிப்பதில் உடனடி கவனம் செலுத்தி, தனியார் வகுப்பு ஆசிரியர்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு சட்டரீதியாக தொழில் அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய…