பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல காரணங்களால் பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்ட மாணவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன பணித்துள்ளார். நேற்று(19) திங்கட்கிழமை கொழும்பு மகரகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு காரணங்களால் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்ட சிறுவர்கள் குறித்து முறையான அறிக்கை ஒன்றை தயாரித்து இலவச பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கல்வியை இடை நடுவில் கைவிட்டுச் சென்றதால் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முடியாமலும், சமூகத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கவும் அது வழிவகுக்கும். இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் அறிக்கை பெற வேண்டியது கட்டாயமாகும். மாணவர்கள் இவ்வாறு விலகிச் செல்வதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.…
Author: admin
450 கிராம் பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்கு வரவுள்ளதாக பேக்காி உாிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்காி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாளை மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும் நாளை கொழும்புக்கு அழைக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால், அன்றைய தினம் அனைத்து வேலைத் தளங்களும் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியுள்ளதாகவும் 27 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ளன. அதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, நோயாளர்களின் எண்ணிக்கை 22,800 எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு அபாயம் உள்ள சுகாதார அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமதொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் உரப்பற்றாக்குறையால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மூன்று மாவட்ட விவசாயிகளும் கோரிக்கை முன்வைத்தனர். விவசாயிகள் முவைத்த கோரிக்கைக்கு அமைவாக, விரைவாக உரிய தீர்வு பெற்றுத் தரப்படுமென விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்திருந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றதுடன் உரப் பற்றாக்குறைக்கு தீர்வையும் பெற்றுக் கொடுத்துள்ளார். அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கமதொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமது அறையில் இருந்த போது அவர் தம்மை தாக்கியதாக குறித்த அதிபர் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார். விளையாட்டு போட்டி ஒன்றின் போது தமது மகன் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து குறித்த தந்தை அதிபரிடம் வினவுவதற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB) மூன்று பகுதிகளில் தனது மின்னியல் கட்டண (e-Billing) முறையை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியை பகிர்ந்துள்ள இலங்கை மின்சார சவை, தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பகுதிகளில் மின்னியல் கட்டண முறை ஜூலை முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாகப் பெறுவதற்கு பதிவு செய்யுமாறும் குறித்த பிரதேசவாசிகளை CEB கேட்டுக் கொண்டுள்ளது. மின்கட்டணத்தை SMS மூலம் பெற விரும்புவோர் REG A/C எண்ணை டைப் செய்து 1987 என்ற எண்ணுக்கு SMS அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மின்னஞ்சல் மூலம் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் www.ebill.ceb.lk இல் உள்நுழைந்து பதிவு செய்யலாம்.
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. # பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் • அனுராதபுரம் – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். • மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம். • கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும். • காலி – அடிக்கடி மழை பெய்யும். • யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும். • கண்டி -…
கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டப்பொல தெரிவித்தார். இது குறித்து இன்று திங்கட்கிழமை (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது அண்மைக்காலமாக நாட்டின் சில பகுதிகளில் மாடுகள் சிலவற்றுக்கு ஒரு வகையான நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக மாடுகள் அறுக்கப்படுகின்ற விடயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்பதை அறியத் தருகின்றேன். குறிப்பாக விலங்கறுமனைகளுக்கு அறுவைக்காக கொண்டு வரப்படுகின்ற மாடுகள் அனைத்தும் எம்மால் நன்கு பரீட்சிக்கப்பட்டு, எவ்வித நோயும் அற்றவை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை அறுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. நோய்த் தொற்றுக்குள்ளான அல்லது சந்தேகத்திற்கிடமான மாடுகளை அறுப்பதற்கு எம்மால் அனுமதி வழங்கப்படுவதில்லை. மேலும், தற்போதைய சூழ்நிலையில் மாடுகளை கொள்வனவு செய்யும்போது அவதானிக்க…
பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, ஜூன் 19 ஆம் திகதி திங்கட் கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2023 ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.