கடந்த வாரம் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூன் 05) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக சிறிதளவு உயர்ந்துள்ளது. மக்கள் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 285.14 ரூபாவிலிருந்து 284.17 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300.48 ரூபாவிலிருந்து 299.45 ரூபாவாக குறைந்துள்ளது. கொமர்ஷல் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 285.81 ரூபாவிலிருந்து 283.83 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300 ரூபாவிலிருந்து 298 ரூபாவாக குறைந்துள்ளது. சம்பத் வங்கி ; அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 286 ரூபாவிலிருந்து 285 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 298 ரூபாவிலிருந்து 297 ரூபாவாக குறைந்துள்ளது.
Author: admin
வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பிரியமாலி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கை ஆகஸ்ட் 11ஆம் திகதி ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வழக்கு மீள அழைக்கப்படும் அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் நினோ மக்விலாட்ஸே ஆகியோர் ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழுவுடன் நடத்திய கலந்துரையாடலில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் இன்று (05) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் புராதன கட்டிடங்களை முதலீட்டு வாய்ப்புகளுக்காக பொருத்தமான முறையில் பயன்படுத்துவது மற்றும் ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. கொழும்பு “கஃபூர் கட்டிடம்” மற்றும் கொழும்பு “எய்ட்டி கிளப்” கட்டிடம் போன்ற பல இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டடங்களின் வரலாற்று தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் நவீனப்படுத்தப்படும் என அமைச்சர்…
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 3 ஆண்களும், 6 பெண்களும், இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணித்து கொண்டிருந்த வேனின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பட்டுள்ளனர். யாத்திரைக்கு சென்று கொண்டிருந்த வெலிகந்த பகுதியை சேர்ந்தவர்களே இந்த விபத்து சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களை கண்காணிப்பதற்காக பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான அண்மைய தீர்மானத்திற்கு சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல். ஜி.புஞ்சிஹேவா இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை இன்று (ஜூன் 05) உள்ளூராட்சி அமைச்சின் முன் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், அவர்களின் கவலைக்கான காரணத்தை விளக்கியதோடு, தலைவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதியாக இருப்பதால், அத்தகைய நியமனம் உள்ளுராட்சி நிறுவனங்களை அரசியலாக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்திருப்பவர்களுக்கு இது அநீதியாகிவிடும் என்று அவர் விளக்கியுள்ளார். மேலும் இந்த நியமனம் தேவையற்றது என கருதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குள் தேவையான ஒருங்கிணைப்பை மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான களஞ்சியங்களினூடாக எரிபொருள் விநியோகத்தின் போது, 6,600 லீற்றர் கொள்ளளவு கொண்ட 582 எரிபொருள் பவுசர்களில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எரிபொருள் விநியோகத்தின் போது முறைகேடு இடம்பெற்றிருப்பதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜயசேகரவினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.அதற்கமைய, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரை நான்கு மாத காலப்பகுதிக்குள் எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் விசாரணைப் பிரிவு, வர்த்தகப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவுகளுக்குச் சென்று குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அதன்போது எரிபொருள் இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் மொத்தத் தொகையில் மாதிரியை பெற்றுக்கொள்ளுதல், தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுதல், விலைமனுக்கோரல், ஏலம் சமர்ப்பித்தல், அமைச்சரவையின் அறிக்கையிடல்…
பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பதவி ஏற்க சென்றிருந்த தர்ஷன சமரவிக்ரம என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. பாதுக்கை, வல்பிட்ட, கெமுனு மாவத்தையில் இன்று காலை 7.35 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 62 வயதான நபர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் வீட்டிலிருந்து தனது மோட்டார் வாகனத்தில் பயணிக்க முற்பட்ட வேளை, மோட்டார் சைக்களில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர் இதற்கு முன்னர் கூட்டுறவு காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்…
கொம்பனி தெரு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி தெரு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கட்டிடத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த 24 வயதான சீன இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (4) மாலை 5.00 மணியளவில் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் 955 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்காக நாளொன்றுக்கு 318 பேர் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு நேற்று (04) தெரிவித்தது. அதற்கமைய, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 40, 359 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்ததாவது, டெங்கு நோயின் பரவல் அதிகரித்துக் காணப்படுவதால், 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிறைந்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கடந்த மே மாதத்தில் மொத்தமாக 9,696 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 955 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில், கம்பஹா மாவட்டத்தில் 8,984 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 8,533 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2,542 பேரும் நோயாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் மொத்தமாக 20,059…
கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரவிவுள்ள இந்த அதிகம் அறியப்படாத சுவாச வைரஸின் அண்மைய அதிகரிப்பு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகளும் விழிப்புணர்வை அறிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கையில், தாம் இந்த வைரஸின் புதிய வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவிற்கு வெளியே இது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை என்றாலும், எல்லைகளுக்கு அப்பால் அது பரவும் வாய்ப்பை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் தொற்று முதன்மையாக மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. 2001, ஆம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சளி, காய்ச்சல் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக, குழந்தைகள் மற்றும்…