ஆபத்தான சுவாச தொற்றுகளுடன் கூடிய HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு தற்போது விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அமைச்சின் கொவிட்-19 இணைப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி, அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் அதிகம் பரவியுள்ள இந்த வைரஸால் இலங்கை இன்னும் பாதிக்கப்படவில்லை, ஆனால் இது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். கொவிட் மற்றும் காய்ச்சலின் அறிகுறிகளுடன் கூடிய இந்த வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
Author: admin
கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று(6) இரவு இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2 என்ற அளவில் சிறிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சமரசத்திற்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதிக்கமைய இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நேற்று(05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். இந்தக் குழு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவுள்ளதுடன், அங்கு கப்பல் நிறுவனம் மற்றும் கப்பல் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அவுஸ்திரேலிய சட்ட ஆலோசகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றிரவு (05) பெய்த கடும் மழை காரணமாக நில்வள கங்கை சில இடங்களில் பெருக்கெடுத்துள்ளது. அதன் காரணமாக சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அக்குரஸ்ஸ – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் பாணதுகம பகுதி நீரில் மூழ்கியுள்ளது. அதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றின் மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேகநபரை கண்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது, சந்தேக நபர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2150 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கண்டி தலைமையக காவல்நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று மாலை நீதிமன்றத்துகு அழைத்துச் செல்லப்பட்ட போது காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி, இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
# தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படுவதற்கான சாத்தியம்! நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன்…
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் வீழ்ச்சியினை அடுத்து, மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவும், மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில், மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது. அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில், மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வழங்கினார்.
தனது பதினொரு வயது சொந்த மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியான மகளின் தந்தைக்கு 110 வருட கடூழிய கடூழிய சிறைத் தண்டனையும் ஆறு இலட்சம் நட்டஈடு வழங்கவும் பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி திரு.ரங்க திஸாநாயக்க இன்று (5) உத்தரவிட்டுள்ளார். ஊரகஸ்மன்ஹந்திய – கோரக்கீனையைச் சேர்ந்த சித்த மரக்கல பாலித டி சில்வா என்ற கேவலமான தந்தைக்கே இந்த சிறைத்தண்டனையும் , நட்டஈடு மற்றும் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த சந்தேகநபரான தந்தை தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்தது. அந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டது. தண்டனை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி, அவர் தனது மகளை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் எனவும்…