சில வங்கிகளில் அதிகாரிகள் மிகவும் மோசடியானவர்கள் என்றும் வேண்டுமென்றே கொடுக்கல் வாங்கல்காரர்களை ஏமாற்றி, சூழ்ச்சியான வகையில் அந்தச் சொத்துகளை தங்களின் ஆட்களையே அனுப்பி அவற்றை விற்கும் செயற்பாடுகள் நடக்கின்றன என்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும், தெரிவிக்கையில், “நாட்டின் அடகு சட்டத்தின் கீழ் சொத்துகளை வங்கி, நிதி நிறுவனத்தில் அடகு வைத்த பின்னர் அடகு பணத்தை மீளச் செலுத்த முடியாது போனால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இதில் மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளுக்கு விசேட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்துன. அதன் உடன்படிக்கைக்கு அமைய அந்த வங்கிகளின் நிறைவேற்று சபையின் தீர்மானத்தின் ஊடாக அந்த சொத்துக்களை ஏலவிற்பனைக்கு விட முடியும். பின்னர் அது தொடர்பான சட்டத்தில்…
Author: admin
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc நிறுவனத்திற்கும் இடையே ஜனாதிபதி செயலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, கடந்த ஆண்டு டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். 32 வயதான அவர், கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்ட உடனேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் (SLC) இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் எதிர்கொண்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று கடந்த மாதம் கைவிடப்பட்டது. அனுமதியின்றி உடலுறவு தொடர்பான மீதமுள்ள குற்றச்சாட்டில் குணதிலக குற்றமற்றவர் என்ற மனுவினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்த மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் (AAP) தெரிவித்துள்ளது. அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது நாட்டிற்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முன்னணி துடுப்பாட்ட வீரர், தனது பிணை நிபந்தனைகளை மாற்ற முயற்சித்தார். எனவே அவர் தினசரி அல்லாமல் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக AAP…
ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு எதிராக மீளாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை எரிப்பொருள் சேமிப்பு முனைய அதிகாரிகளுடன் நேற்று(07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனத்தால் இயக்கப்படும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மட்டுமே கடந்த வாரம் அனைத்துப் பொருட்களிலும் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரித்தமை தெரியவந்துள்ளதை அடுத்து இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “மொத்தம் 255 வியாபாரிகள் எந்தவொரு தயாரிப்புக்கும் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்கத் தவறியுள்ளனர். அதே நேரத்தில் 363 விநியோகஸ்தர்கள் ஒரு தயாரிப்புக்கான குறைந்தபட்ச இருப்பை வைத்துள்ளனர். அத்தோடு, ஒப்பந்தங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது” என்றார். இதன்போது, அடுத்த 18…
பொரளை தனியார் வைத்தியசாலையொன்றின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு எதிரான உத்தரவை நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. கொழும்பு, தனியார் மருத்துவமனையொன்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07.06.2023) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்த கோரிக்கையை செல்லுபடியற்றதாக்குமாறு குறித்த வைத்தியசாலை மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த மனு தொடர்பான விவகாரங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் உள்ளிட்ட நீதியரசர்கள் ஆயத்தினால் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் எழுந்த சர்ச்சைகளையடுத்து, மேற்படி தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு…
நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியின் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து நுவரெலியா சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த போதே குறித்த வான் பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது குறித்த வானில் 8 பேர் பயணித்துள்ள போதிலும் ஒருவர் மாத்திரம் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வேறொரு வான் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு உரிம காலத்தை தாண்டிய திட்ட உரிமங்களை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023-2026 மற்றும் 2026-2030 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட அமலாக்கத் திட்டம் குறித்து நேற்று (07) நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் விடப்பட்ட ஆனால் இன்னும் சாதகமான பணிகளை மேற்கொள்ளாத விநியோகஸ்தர்களின் அனுமதியை ரத்து செய்ய மின்சார சபைக்கு மற்றும் சூரிய சக்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகஸ்தர்களின் கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தும் திட்டம், புதிய மின்சார கொள்முதல் விலை சூத்திரம், அடுத்த 18 மாதங்களில் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, 91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5% குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4% குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளவ்வ சந்தியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07) மாலை கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹபரகட ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, காலி கொழும்பு வீதியில் மரக் கூட்டுத்தாபனத்திற்கு அருகில் அளுத்கமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி அந்த திசையில் பயணித்த சைக்கிள் ஒன்றின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 32 வயதான சைக்கிள் ஓட்டுநர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. • 1kg பயறு – ரூ 1225 .00 • 1kg காய்ந்த மிளகாய் – ரூ 1290.00 • 1kg சிவப்பு பருப்பு – ரூ. 299.00 • 1kg சிவப்பு நாட்டரிசி – ரூ: 200.00 • 1kg நெத்தலி – ரூ. 1140,00 • 1kg கோதுமை மா – ரூ. 200.00 • 1kg சோயா – ரூ. 650.00 • 1kg சிவப்பு பச்சை அரிசி – ரூ. 139. 00 • 1kg கடலை – ரூ. 540.00 • 1kg வெள்ளை சீனி – ரூ. 225.00