இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், பணவீக்கம் இவ்வளவு விரைவாக குறையும் என்று சர்வதேச அளவில் யாரும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை மத்திய வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவும் 2024 ஆம் ஆண்டில் வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என அறிவித்துள்ளதாகவும், அதற்காக தனது பங்களிப்பை வழங்க இலங்கை உறுதியாக வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
Author: admin
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் புதன்கிழமை (14) நடைபெறவுள்ளது. அந்த ஏலத்தில் 358 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஐந்து அணிகளின் வீரர்கள் உரிமையாளர்களால் வாங்கப்பட உள்ளனர். இந்த ஆண்டுக்கான ஏலத்தில், உலகின் தலைசிறந்த வீரர்கள் சிலர் ஏலத்தில் விற்கப்பட உள்ளனர். • இந்தியா – சுரேஷ் ரெய்னா • ஆஸ்திரேலியா – க்றிஸ் லீன், பென் கட்டின் • தென்னாப்பிரிக்கா – ரேசி வெண்ட டூசன் • நியூசிலாந்து – கொலின் டி கிரண்ட்ஹோம் • வங்கதேசம் – தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம் • வெஸ்ட் இண்டீஸ் – எவின் லூவிஸ், கார்லோஸ் பிராத்வைட் • ஆப்கானிஸ்தான் – நூர் அகமட்லா, முகமது நபி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது.
கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல செயலகப் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, இரத்தினபுரி, அலபாத, கலவான, பெல்மதுல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்…
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணி, அங்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளில் அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், சுமார் 3 மணித்தியாலங்கள் ஹோட்டலில் தரையில் உட்கார வேண்டியிருந்தது. ஐசிசி போட்டியில் ஒரு தேசிய அணியிடம் காட்டப்பட்ட இந்த அக்கறை குறித்து மகிஷ் தீக்ஷனா தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அணியினர் மதியம் ஹோட்டலுக்கு வந்ததாகவும், இலங்கை அணிக்கு முன்னதாக வந்த மற்றொரு தேசிய கிரிக்கெட் அணியின் ஆய்வு காரணமாக சிலரின் “செக்-இன்” இலங்கை தேசிய அணி வீரர்கள் தாமதமாகினர். இருப்பினும், இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் முறைப்பாடு அளித்ததையடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஐ.சி.சி.யுடன் இணைந்து, குறுகிய காலத்திற்குள் சிக்கலை சரிசெய்ததாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பம் முதல் இயங்கி வந்த வாடகை வாகன சேவைக்கு மேலதிகமாக – விமான நிலைய வளாகத்தில் அதிக வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்கி புதிய வாடகை வண்டி சேவையை ஆரம்பிக்க இரண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும். இதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமான நிலைய ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு நிதி அனுகூலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டுள்ளதாகவும். இதன் காரணமாக தாம் பெறும் பயண போக்குவரத்து எண்ணிக்கை குறைவதால் பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் (9) விமான நிலைய வாடகை வாகன சேவைகளின் ஒன்றினைந்த சங்கத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துத் தெரிவித்தனர். இதனால் பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதகாகவும்,தமக்கு இதுவரை எந்த முறைப்பாடுகளும் இல்லாமல் உயர்தர சேவையை வழங்கியுள்ளதால் இத்தகைய நியாயமற்ற செயல்களால்,தாம் மிகவும் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளதாகவும்,இது…
நாளாந்த நோயாளர்களின் சிகிச்சைக்காக சுமார் 1,000 அத்தியாவசிய மருந்துகள் காணப்படும் நிலையில், இவற்றில் 60 மருந்துகளுக்கு மாத்திரமே விலைக் கட்டுப்பாடு காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கடந்த காலங்களில் பல அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் மக்களால் வாங்க முடியாத அளவுக்கு அதிகரித்திருந்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவா் ஹரித அலுத்கே கூறியுள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், அத்தியாவசிய மருந்துகளின் விலைகளும் குறைய வேண்டும் எனவும், அதனை வழங்குவதற்கு உரிய நடைமுறைமையை சுகாதார அமைச்சு தயாரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்து இறக்குமதியாளர்கள் தமக்கு விரும்பியவாறு மருந்துகளின் விலையை அதிகரிக்கின்றனர், ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் மருத்துவா் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.
நாளை (13) காலை 10.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6.00 மணி வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பலன்வத்தை, கனத்த வீதி, நீரேற்று நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரக்கபிட்டிய, சித்தாமுல்ல, அறுவ்வால, ரத்மல்தெனிய, மஹரகம – பிரியந்தல வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்திற்கு முன்னதாக வாரத்தின் முதல் நாளான திங்களன்று (12) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் சரிந்தது. அதேநேரத்தில் சீனாவின் எரிபொருள் தேவை வளர்ச்சி மற்றும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவையும் எண்ணெய் விலையின் மாற்றத்துக்கு தாக்கம் செலுத்தியுள்ளன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 04.37 GMT க்குள் 97 சென்ட்கள் அல்லது 1.3% சரிந்து ஒரு பீப்பாய் 73.82 அமெரிக்க டொலர்களாக இருந்தது. யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 1.3% சரிந்து ஒரு பீப்பாய் 69.24 அமெரிக்க டொலர்களாக இருந்தது.