நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய புத்தகங்கள் போதிய அளவில் கிடைக்காததால் முறைப்பாடுகளை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் நிலவும் காகிதத் தட்டுப்பாடு, காகித விலை உயர்வு போன்ற காரணங்களால் பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான புத்தக விநியோகம் பாதியாகக் குறைந்துள்ளது. கொழும்பை அண்மித்த பொலிஸ் நிலையங்களுக்கு மாத்திரம் மாதாந்தம் சுமார் இருபது குறிப்பேடுகள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது ஐந்து புத்தகங்கள் மாத்திரமே பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையால், புத்தகங்கள் முடிந்த பின் மற்ற குறிப்புகளில் உள்ள காகிதங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.
Author: admin
நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குளிருடனான வானிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த இரு தினங்களில் 802 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 256 ஆடுகள் உயிரிழந்துள்ளன. வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் வியாழன் (08) மற்றும் வெள்ளிக்கிழமை (09) ஆகிய தினங்களில் மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் திடீரென உயிரிழந்துள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி வடக்கு மாகாணத்தில் 358 மாடுகளும் 191 ஆடுகளும் உயிரிழந்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 444 மாடுகளும் 34 எருமைகளும் 65 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் இன்று இடம்பெற்ற நிலையில். தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் இறுதி வாரத்தில் முடிவடைந்தது. கடந்த மாதம் 27ஆம் திகதி 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று நடந்த வாக்கெடுப்பில் உயர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். உயர் நீதிமன்றம் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெற்றது. 58 வயதான பி.டி.உஷா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளார். 1986-ம் ஆண்டு நடந்த சியோல் ஆசிய விளையாட்டு போட்டியில் 200, 400,…
மஸ்கெலியா சாமிமலை, கவரவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (10) மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 33 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில், சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு இன்று (10) கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது விஷேட அழைப்பின் பெயரில் அங்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட தமிழக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினர்.
கடந்த நவம்பர் மாதம் வெளிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது பல துறைகளிலும் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் நேற்று வெள்ளிக்கிழமை 9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்கள் தற்போது பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பினரை வெளிநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தொழில்திறன் பரீட்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்றைய தினத்தை விட இன்று சில பகுதிகளில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கொழும்பு – 191 பதுளை – 169 கேகாலை – 155 களுத்துறை – 146 கண்டி – 126 இரத்தினபுரி – 114 குருநாகல் – 106 காலி – 97
போதை பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலைக்குச் சென்ற 10 பேர் ஹட்டன் கோட்ட புலனாய்வு பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸார் விசேட குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் போதைபொருட்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள போதை பொருள் பாவனையினை தடுக்கும் முகமாக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் 09 ஆம் திகதி ஹட்டன் கோட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய கோட்ட புலனாய்வு பிரிவின் பிரதான பரிசோதகர் தலைமையில் ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் 1318 என்ற மோப்ப நாயினை பயன்படுத்தி கினிகத்தேனை தியகல பகுதியில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ்கள், வேன்கள் போன்றனவற்றில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுற்றுலா சென்ற பத்து பேர் கேரள கஞ்சா…
ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற பிராந்திய உச்சிமாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் எந்த நாட்டிற்கும் எண்ணெயை விற்காது என்று ஜனாதிபதி புடின் இதன்போது தெரிவித்தார். உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விலை வரம்பை ஒரு முட்டாள்தனமான முடிவு என்று அவர் விபரித்தார். ஜி-7, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், உக்ரைனில் அதன் போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் திறனைக் குறைக்கும் நோக்கில் ரஷ்ய எண்ணெயின் மீது ஒரு பீப்பாய்க்கு 60 டொலர்கள் என்ற விலை வரம்பை விதித்தன.