லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தலைநகரின் பல பகுதிகளில் சிறிய ரக துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர் முழுவதும் கரும் புகை எழுவதைக் காண முடிந்தது. பல மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சண்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஐ.நா…
Author: admin
2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளன. 2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். பின்வரும் இணையதளங்களில் பரீட்சை பேறுபேறுகளை பார்வையிட முடியும் : https://www.doenets.lk/examresults http://www.results.exams.gov.lk/ 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாதாகவும், அறிவித்துள்ளது.
ஹசலக்க, கங்கேயாய, பஹே-எல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய அனுத்தரா இந்துனில் என்ற பாடசாலை மாணவி ஒருவர் இன்று (28) காலை உயிரிழந்துள்ளார். பஹே-எல என்பது காட்டு யானைகளின் தாக்குதல்களை அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கிராமமாகும். அதே நேரத்தில் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது. இச்சிறுமி, 14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு இலக்கானார். பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சிறுமி நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு உரிய தீர்வை அதிகாரிகள் வழங்காவிடின் மேலும் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம். இதேவேளை,இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மீள தோற்ற வேண்டுமெனில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் ஒன்லைன் முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர். உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் டொன் வரையான டீசல் மற்றும் பெற்றோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் டொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு வரை தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனிடையே டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களையும் எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி விநியோகிப்பதற்கு தம்மிடம் கையிருப்பு உள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை , எதிர்கால எண்ணெய் விநியோகத்திற்கு தேவையான கொள்முதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளமில்லாத வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வது தொடர்பான சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது. இதன்படி, அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும் எனவும் இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது தலைமன்னார் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட போது கடற்படையினர் இழுவை படகு மற்றும் கடல் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை, கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கூற்றுப்படி, நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தேவைக்கு இடையூறு இன்றி போதுமான அளவு விநியோகம் எம்மிடம் உள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என சிபிசி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய வணிகத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, இந்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த செயல்முறை 6 வாரங்களில் இறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதற்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நீண்ட கால ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கான, விருப்பங்களை அண்மையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பகிரங்க அறிவித்தல் ஊடாக கோரியிருந்தது. அதன்படி, எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள்…
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது மேலும் தாமதமானால் உடனடியாக இராஜாங்க அமைச்சரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளும் தரப்பு நாடாளுமன்றக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை (29) மாலை 5 மணிக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பிற்காக கூடவுள்ளது.