Author: admin

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மின்தூக்கிகள் இரண்டும் செயலிழந்ததன் காரணமாக இன்று (20) நடைபெறவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திமுது அமரசிங்க தெரிவித்தார். இந்த வைத்தியசாலையின் மூன்று மாடி கட்டிடத்தில் பெண் மற்றும் ஆண் வார்டுகள் அமைந்துள்ளன, மேலும் இந்த வார்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் இந்த மின்தூக்கிள் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால், நேற்றிரவு இந்த இரண்டு மின்தூக்கிகளும் திடீரென பழுதடைந்தமையால், நோயாளிகளை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சத்திரசிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளை மயக்கமடைந்த பின் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் திமுது அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மின்தூக்கி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு இயந்திரங்களையும் மிக விரைவில் பழுதுபார்க்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இந்த…

Read More

இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் நோயாளர்கள் உயிரிழக்கின்றமை மற்றும் பல்வேறுவிதமான பக்கவிளைவுகளை எதிர்கொள்கின்றமை தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த இரு வகையான மருந்துகளும் இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Read More

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் நீடிக்கப்பட்டுள்ளது. காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற் கொண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வௌியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளாா். இதன்போது பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் இதன்போது கருத்துப் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிாிவு தொிவித்துள்ளது.

Read More

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபா 28 சதம் – விற்பனை பெறுமதி 314 ரூபா 38 சதம் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 00 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 52 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 83 சதம் – விற்பனை பெறுமதி 344 ரூபா 88 சதம் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 63 சதம் – விற்பனை பெறுமதி 239 ரூபா 24 சதம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 61 சதம் – விற்பனை பெறுமதி 215…

Read More

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பணவீக்கத்தினால் அதிகரித்துள்ள பசுந்தேயிலையின் விலை, டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சிறு தேயிலை நில உரிமையாளர்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலங்களில் முன்னூறு ரூபாயாக உயர்ந்திருந்த ஒரு கிலோ பசுந்தேயிலை துாள் தற்போது ரூ. 125 முதல் ரூ. 160 ஆக குறைந்தது. ஆனால் கச்சா தேயிலை துாள் உற்பத்தி செலவு சிறிதும் குறையவில்லை. உரம் விலை ரூ. 12000. பறிப்பதற்கு ஒரு நாளைக்கு கூலி கூலி ரூ. 1500 ஒரு பறிப்பவர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிலோ வரை அறுவடை செய்யலாம். தேயிலைத் தோட்டங்களில் மற்ற பராமரிப்புப் பணிகளுக்கு நாள் ஒன்றுக்கு தொழிலாளர் கூலி ரூ. 2000 விலை வீழ்ச்சியின் இந்த சூழ்நிலையால், தொழிலாளர்களின் அன்றாட வருமானம் குறைந்து, கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலைமைக்கு அமைவாக சிறு தேயிலை நில உரிமையாளர்கள் பலர்…

Read More

இலங்கை ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து ஈடுபாட்டை பேணுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐ.நாவின் அறிக்கையாளர்கள் பலர் கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்டுள்ளனர் அவர்களின் பரிந்துரைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று எதிர்திசையில் வந்த பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, ​​வேனில் 6 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் 5 பேர் காயமடைந்து வத்துப்பிட்டியல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. பொல்ஹேன்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் குழுவொன்று கிரிதலே முகாமிற்கு கடமைகளுக்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடா்பில் பௌசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. நெடுந்தீவு அருகே நேற்று (19) இரவு இந்திய மீனவர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மேலுமொரு படகும் வெறுமையாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு தொடர்பிலும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

போதைப்பொருள் பாவைனையில் ஈடுபட்டு, வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேல்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்திய 41 சாரதிகள் இனங்காணப்பட்டதுடன், அவர்களில் 19 பேர் பஸ் சாரதிகள் என அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்துபவர்களினால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படும் பொலிஸார், நாட்டில் பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் 23,704 விபத்துக்களில் மொத்தம் 2,370 பேர் உயிரிழந்தனர், 2021‍ ஆம் ஆண்டில் 22,847 விபத்துக்களில் 2,559 பேர் உயிரிழந்தனர், 2022 ஆம் ஆண்டில் 21,992 விபத்துக்களில் மொத்தம் 2,536 பேர் உயிரிழந்தனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு (2023) ஜனவரி 1 முதல் ஜூன் 18 வரை 8,875 விபத்துகளில் மொத்தம்…

Read More