Author: admin

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் குறிப்பிட்டார். அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் மீளத் திறப்பது தொடர்பில குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில், அறுவை சிகிச்சை அறைக்குள் கிருமிகள் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

வெலிமடை-பெலும்கல வனப்பகுதியில் 20 ஏக்கர் அளவில் தீயினால் நாசமாகியுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையுடன் நேற்று (19) பிற்பகல் ஆரம்பித்த தீ வேகமாக பரவியுள்ளது. விசமிகளால் காட்டுப் பகுதிக்கு தீ ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கெப்பெட்டிபொல பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53 கிகா வோட்டாக பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இன்று காலை பதிவு செய்யப்பட்ட உண்மையான தேவையின்படி, இன்று மின் உற்பத்தி 50 கிகா வோட்டை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி, அண்மையில் நிறுவப்பட்ட ஹம்பாந்தோட்டை, டீசலில் இயங்கும் மின்பிறப்பாக்கிகள் உட்பட இலங்கை மின்சார சபையின் அனைத்து அனல்நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Read More

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் இன்றைய தினம் தென்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அரிய சூரிய கிரகணத்தை அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த கிரகணம் தெளிவாக தெரிந்துள்ள போதும் இலங்கையில் தென்படவில்லை. சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என நான்கு வகையான சூரிய கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன்படி, 400 வருடங்களுக்குப் பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரியகிரகணம் இன்று நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்ஹ இதனைத் தெரிவித்துள்ளார். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தற்காலிக தீர்வை ஏற்க தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அரச வங்கி மூலம் பெற்று கொண்ட கடன் செலுத்தலுக்காக 6 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் இருந்து சிறந்த பதில் கிடைக்கப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஹிஜ்ரி 1444 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பிரதேசத்திலாவது சவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 1320 புதிய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக பெருமளவான நியமனங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தற்போது நாட்டில் சுமார் 19 000 வைத்தியர்கள் காணப்படுகின்றனர். புதிய நியமனங்களுடன் இந்த எண்ணிக்கை 20 000ஆக உயர்வடையக் கூடும். கடந்த காலங்களில் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் இருந்த போதிலும், ஒரே நேரத்தில் அதிகளவான வைத்தியர்களை நியமிக்க முடியும் என்பது, இலவச சுகாதார சேவையில் பாரிய சாதனை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஆண்டுதோறும் மருத்துவக் கல்விக்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1500 முதல் 1800 வரை காணப்படுகிறது. இதனை 5000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் மூலம் இனிவரும் காலங்களில் சுகாதாரத்துறையில்…

Read More

கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகநபர்களான பெண்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. முறைப்பாட்டாளர் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

கடந்த மே மாதம் 9ம் திகதி, பொலிஸ் வாகனத்தை தாக்கி தீ வைத்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 18, 31 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (20) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More

வெடிபொருட்கள் தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கான உரிமக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கல் வெடி மருந்து உற்பத்திக்கு மட்டும் 2,000 ரூபாவாக இருந்த உரிமக் கட்டணம் 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிமக் கட்டணம் 4,000 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாகவும், கல் ​வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிமக் கட்டணம் 7,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெடி பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் வணிகத்திற்கான உரிமக் கட்டணம் மற்றும் வெடிபொருள் வழங்குனர்களின் வணிகத்திற்கான உரிமக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான அனுமதிக் கட்டணத்தை 2000 ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More