நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியா ஒன்றினால் மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா இதனை தெரிவித்துள்ளார். இந்த நோய் அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய மழையுடனான காலநிலையில் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் இந்த மண் காய்ச்சல் நோய் பரவி வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீர் போன்றவற்றின் ஊடாக இந்த பக்டீரியாக்கள் உள்நுழைவதாக வைத்தியர் எச்சரித்துள்ளனர்.
Author: admin
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். ››› பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் • அனுராதபுரம் -…
பாரியளவிலான 4 குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, • போதைப்பொருள் • திட்டமிடப்பட்ட குற்றங்கள் • பாரியளவிலான சுற்று சூழல் அழிப்பு • உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 30ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லைக்காவின் யப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணியும் மோதவுள்ளன.
யூடியூப் வீடியோக்களைப் பார்த்து துப்பாக்கி செய்த இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பதுரலிய சீலதோல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவுமு் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாமா மருமகன் உறவு முறை என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, 5 அடி நீள துப்பாக்கி, T56 துப்பாக்கி தோட்டா, இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுரலிய பிரதேசத்தில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் கடையை எரித்து நாசம் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இவர்களில் ஒருவரென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…
ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 15,406 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், ரஷ்யாவிலிருந்து 4,748 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,905 பேரும், சீனாவிலிருந்து 2,823 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,688 பேரும், கனடாவிலிருந்து 2,503 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் நாட்டுக்கு வந்துள்ளனர். மே மாதத்தில் மொத்தம் 83,309 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 577,149 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்றும் சுற்றுலா அபிவிருத்தி…
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட காலக்கெடு பின்வருமாறு: வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமைகளில் – நள்ளிரவு 1 மணிவரையும் ஞாயிற்றுகிழமை – நள்ளிரவு 12.30 மணிவரையும். எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சிகள் மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தளபதி விகும் லியனகேயின் வேண்டுகோளின் பேரில் ராணுவத்தினருக்கான உணவுக் கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முப்படைகளின் தளகர்த்தர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார். 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையினால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில், இராணுவம் அனைத்து இராணுவ உறுப்பினர்களின் உணவுக்கான கொடுப்பனவுத் தொகையை தோராயமாக 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். “தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் தவிர, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓட்டுநர்களின் உடல்நிலை மற்றும் மனநல அளவை அளவிடுவதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.” குறிப்பாக அபராதத்தை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வாகனம் ஓட்டுவதற்கு முன்னர் சாரதியின் உடல் தகுதி மற்றும் மனச் செறிவு ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. அதனை அவதானிப்பதற்காக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு.லசந்த அழகியவன்ன கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்தியை நீடித்து நிலையாக அதிகரிக்க நீண்ட கால வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் பலன்கள் அடுத்த 4 மாதங்களில் அனைத்து நுகர்வோருக்கும் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குஞ்சு விநியோகத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்களுக்கு, 2,300 கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் சுமார் 100,000 கோழிக் குஞ்சுகள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.