இலங்கை கிரிக்கெட் அங்கத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, இலங்கை கிரிக்கெட் கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா நிகர உபரி வருமானத்தை பதிவு செய்துள்ளது. குறித்த வருடத்தில் இலங்கை கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், இது 2021 ஆம் ஆண்டு மொத்த வருமானத்தை விட 120 சதவீத வளர்ச்சியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.. இது தொடர்பான கணக்கறிக்கை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் பதிவு செய்த 6.3 பில்லியன் ரூபா உபரியானது வரலாற்றில் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், அனுசரணை ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் வருடாந்த ஒதுக்கீடுகள் இந்த வருமான…
Author: admin
2023 மே மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2023 ஆண்டு மே மாதத்தில் 22.1% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்த உணவு வகை ஆண்டு பணவீக்கம் (புள்ளி) 2023 ஆண்டு மே மாதத்தில் 15.8% ஆக குறைந்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்தில் 39.0% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளி) மே மாதத்தில் 27.6% ஆக கணிசமாகக் குறைந்துள்ளது. உணவு வகையைப் பொறுத்த வரையில், புதிய மீன், காய்கறிகள், சீனி, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கருவாடு மற்றும் டின் மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.…
கண்டியில் பெண் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா பணம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத மூத்த நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ரபி பிடியாணை பிறப்பித்துள்ளார். மேலும் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தரவாதத்தை எச்சரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நாடளாவிய ரீதியில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சுக்குள் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் கீழ் இல்லாத சர்வதேச பாடசாலைகள் மற்றும் ஏனைய பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான அளவுகோல்களை தேசிய கல்வி ஆணைக்குழு (National Education Commission) தயாரித்து வருவதாகவும் கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இது முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை காலத்தின் தேவைக்கேற்ப திருத்தம் செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழு அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது. இலங்கையில் இயங்கிவரும் சர்வதேச பாடசாலைகள், அந்த பாடசாலை அமைப்பினால் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக பிரபாகரனின் மரபணு (DNA) பரிசோதனை, பிரேத பரிசோதனை அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருப்பதாக குற்றஞ் சுமத்தப்படுகிறது. இதனைக் காரணங்காட்டி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. எனினும், அதனை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இவ்வாறான நிலையில், பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கோரியுள்ளார். பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, DNA பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டன? என்பது தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி இந்த தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது. 2022ஆம் ஆண்டு…
இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.77 ரூபாயில் இருந்து 300.71 ரூபாயாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 318.51 ரூபாயாக அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 318 ரூபாயாகவும் மாறாமலுள்ளன. சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 315 ரூபாயாகவும் மாறாமலுள்ளன.
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் (வட்டிவுட்டியில்) இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் இருந்து சம்மாந்துறை வழியினூடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடினார். இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இரு தரப்பு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் குறித்தும் கலந்துரையாடினார். ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகை தரும் உலாவர்கள் (sufers) ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் (surf-spot) ஒன்றாக அருகம்பே கடற்கரையை ஊக்குவிக்க கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும்…
ஹோமாகம மற்றும் கொஸ்கொடை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த வகையில் ஹோமாகம நியந்தகலவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் கொஸ்கொடை பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இன்று (21) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு விஹார மகாதேவி பூங்காவில் விசேட மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் அதன் தலைவர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டார். “இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று பிற்பகல் 1 மணிக்கு விஹார மகாதேவி திறந்தவெளி அரங்கில் மாபெரும் கண்டன தொழிற்சங்க கூட்டு மாநாட்டை நடாத்துகின்றன.இதற்கு முக்கிய காரணம் இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளமையே. மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபை போன்ற மாபெரும் நிறுவனத்தை தேசிய பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் திணிப்பது பாரதூரமான நிலை. அந்த சட்டத்தின் உள்ளடக்கத்துடன், தேவைப்பட்டால் தொடர் வேலைநிறுத்தம் செய்வது என, இன்றைய மாநாட்டில் தீர்மானம்…