இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) சிறிதளவு உயர்வடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 300.71 முதல் ரூ. 298.77 மற்றும் விற்பனை விலையும் ரூ. 318.51 முதல் ரூ. 316.44. கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 295. 70 முதல் ரூ. 297.68 ஆகவும், விற்பனை விலை ரூ. 318 முதல் ரூ. 316. சம்பத் வங்கியில், அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் மாறாமல் ரூ. 298 மற்றும் விற்பனை விகிதம் ரூ. இருந்து குறைந்துள்ளது. 315 முதல் ரூ. 313.
Author: admin
நாட்டில் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 7 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 250 டொலர் அறவிடப்படும். மேலும் விசா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 14 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விசா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 டொலர் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணி முறிப்பு காணிகளை விடுவிக்க கோரியும் , தண்ணி முறிப்பு மக்களை மீள்குடியேற்றவும் வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய தண்ணிமுறிப்புப் பிரதேச மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதன்போது குருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில் பொலிசார் புலனாய்வாளர்கள் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
2022 ஆம் ஆண்டில் 911,689 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது வரலாற்றில் ஒரு வருடத்தில் வழங்கப்பட்ட அதிகூடிய கடவுச்சீட்டுகள் எண்ணிக்கை ஆகும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான செயற்திறன் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடவுச்சீட்டு தொடர்பான முன்னெப்போதும் இல்லாத தேவையை எதிர்கொண்டு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மனித மற்றும் பௌதீக வளங்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதன் மூலம் மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க ஊழியர்கள் இரவும் பகலும் உழைத்தனர். இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இன்று (21.06) கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்திற்கு மட்டுமான பிரச்சினை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும். வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும். இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 01ம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்களால் அப்போது தெரிவித்தனர். எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் நடத்துனர்கள் இன்றி நான்கு பகுதிகளில் சேவையை ஆரம்பித்தன. மேற்படி பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் நடத்துனர்கள் பணத்தை மோசடி செய்வதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாகவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலைக்கு கொட்டாவவிலுள்ள மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் நடத்துனர்கள் இன்றி பேரூந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகள் இல்லாத பிரதேசமாக மாவட்டத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்களை கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரம்குடா, சாகாமம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 343 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் 72 வீடுகள் கட்டப்பட உள்ளன. மீள்குடியேற்றப்படும் பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 38000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மேலும், நிரந்தர வீடுகள் கட்டி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது.
அரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன, ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (20.06.2023) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சந்திம வீரக்கொடி குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் மூத்த பிரஜைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. அதேவேளை, வலது குறைந்தவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் இவ்வாறு வழங்கப்படுவதில்லை. அது தொடர்பில் நிதியமைச்சு உடனடி கவனத்தை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள் நிலையில் இதற்கு பதில் நிதி அமைச்சர் பதிலளிக்கையில், நிதி அமைச்சானது மக்களுக்கு வழங்கும் நிவாரண கொடுப்பனவுகளில் எத்தகைய குறைபாடுகளையும் வைக்கவில்லை. அவ்வாறான கொடுப்பனவுகள் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏதாவது பிரதேச செயலாளர் பிரிவிற்கு அந்த கொடுப்பனவுகள்…
கொழும்பு – காங்கேசந்துறை இடையிலான புகையிரத பாதையின் சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு, இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடிகள் ($15 மில்லியன்) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அநுராதபுரத்தில் இருந்து புகையிரத பாதையை நவீனமயப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரத்திலிருந்து மஹவ வரையிலான இந்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.