Author: admin

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரை செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. ஏனைய பல்கலைக்கழகங்களின் விரிவுரை செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின. எனினும், தங்களது பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மாத்திரம் ஒருவாரத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற 2 பேருக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த 2 பேரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ´த ஹிந்து´ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதோடு, மேலும் திங்கட்கிழமை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 60,313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read More

இளம் பெண் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 60 வயதுடைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர் 22 வயதுடைய இளம் ஆசிரியையை விசேட கடமையின் காரணமாக பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார். பின்னர், உரிய அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆசிரியர் நேற்று மதியம் பாடசாலைக்கு வந்தார். ஆசிரியை தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியில் செல்ல தயாரான போது சந்தேகநபரான அதிபர் அவரை கட்டிப்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர், அந்த ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்று மினுவாங்கொடை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்தார். அதனையடுத்து, இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டார். பின்னர், இளம் ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய அதிபரிடம்…

Read More

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார். 24 வயதான களுத்துறை வடக்கில் வசித்து வந்த பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

காலி முகத்திடல் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. காலி முகத்திடலை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலை பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதன்படி, காலி முகத்திடலின் இயற்கை அழகுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

Read More

கட்டார் பிரபல பத்திரிகையான the Peninsula News Paper ரமழான் மாதத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கின்றன. வெற்றி பெரும் நபருக்கு 800 Qr வழங்க படும் என அறிவித்த நிலையில் அந்த பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி புதிதாக ஒரு இணைய கணக்கு சிலரால் ஆரம்பிக்க பட்டுள்ளன. நீங்கள் வெற்றியடைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! உங்கள் பரிசைப் பெற உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் முகவரியை உள்ளிடவும். நீங்கள் பதிவுசெய்த பிறகு 24 மணிநேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்வோம், என உங்கள் DEBIT CARD PIN நம்பரை பதிவிடுங்கள் என அவர்கள் பதிவிட்டுள்ளார்கள் அவ்வாறு நீங்கள் உங்கள் DEBIT CARD PIN நம்பரை கொடுத்தால், அவர்கள் உங்கள் வங்கியில் உள்ள பணத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறான கொள்ளையர்களிடமிருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் இதை அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள் நன்றி. அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Read More

கொழும்பு துறைமுக நகரத்தில் நவீன வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆசிரி துறைமுக நகர தனியார் வைத்தியசாலைக்கும் (Asiri Port City Hospital) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அந்த மருத்துவமனைகளை நிறுவி பராமரிக்கும் வாய்ப்பை ஆசிரி துறைமுக நகர தனியார் வைத்தியசாலை (Asiri Port City Hospital) பெற்றுள்ளது. மருத்துவமனையில் சுமார் 500 படுக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

காசநோய் இரத்தினபுரியில் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காசநோய் தடுப்பு தொடர்பான பொது விழிப்புணர்வு தொடர்பில் நேற்றைய தினம் (17.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த வருடம் (2022) 331 காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் 30 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 10 சதவீதமானோர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டமை கவலைக்குரிய விடயம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வருடாந்தம் சுமார் 14,000 காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், 10 ஆயிரம் பேர் மட்டுமே கண்டறியப்படுகின்றனர். சுமார் 4 ஆயிர்ம் நோயாளர்கள் பதிவாகாமல் இருப்பதற்கு அறியாமையே முக்கிய காரணம் என வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெயிலில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுகிறது. அதிக வெப்பத்தை உள்ளீர்த்தலால் ஏற்படக் கூடிய நீர்சத்து குறைபாடானது மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்தார். தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அதிகளவில் வெயிலில் அன்றாட செயற்பாடுகளில், அல்லது தொழிலில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே இந்தக் குழுவினர் அநாவசியமாக வெயிலில் செல்வதை நிச்சயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் உள்ளிட்ட ஏனைய அனைவரும் இவ் அதிக வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஆடைகளை அணியும் போதும் இள நிறத்தில் அணிவது பொறுத்தமானதாகும். அத்தோடு அதிகளவில் நீர் அருந்துதல் மிக முக்கியத்துவமுடையதாகும். எனவே நாளொன்றுக்கு சுமார் இரண்டரை லீற்றர்…

Read More

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சின்னங்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. நில ஆக்கிரமிப்பு மற்றும் தொல்பொருளை பாதுகாக்கும் பெயரில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை கண்டித்து இந்த போராட்டத்துக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய நாளில் நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More