காலி, கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனா். அந்த முச்சக்கரவண்டியின் சாரதி இன்று (24) காலை பியதிகம பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு அருகில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தலையை வைத்து அவா் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. குறித்த நபர் சுமார் 31 வயதுடையவர் எனவும் ஹபுகல, வக்வெல்ல பிரதேசத்தை சோ்ந்தவா் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா். கடந்த 22ஆம் திகதி காலி கராபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் அதிலிருந்து தப்பிச் சென்றிருந்தனா். அதன்போது தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியே…
Author: admin
# இலங்கை காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயாருடன் வசித்து வந்த 22 வயதுடைய ரி.ஜே.மாளவிகா என்ற யுவதி தாயார் வீட்டுக்குள் இருந்த வேளை வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். வீட்டுக்குள் சிக்கிய தாயார் காயங்கள் எதுவுமின்றி வெளியில் தப்பியோடி வந்து அயலவர்களின் உதவியைக் கோரியுள்ளார். அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதிலும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ அணைக்கப்பட்ட பின்னர் அயலவர்களின் உதவியுடன் காணாமல்போன மகளைத் தாயார் தேடியுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட மகள் அவ்வேளை வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாளவிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் தோல்வியால் ஏற்பட்ட மனநோயால் குறித்த யுவதி…
வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். ரிதிமாலியத்த டி 01 கால்வாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி, அவரது மனைவி மற்றும் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா் எனினும் இரண்டரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மேலும், தம்பகல்ல களுகஹராவ பகுதியில் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 26 வயதுடைய புத்தல பிரதேசத்தைச் சேர்ந்தவா் என தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிரிஹான தெல்கந்த – ரத்னபிட்டிய பழைய கெஸ்பேவ வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 82 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். தற்போது வரையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் நேற்று (23) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நாட்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தலையீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல்…
அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று (24) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை பேருந்து நிலைய புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியில் வர்த்தகம் நிலையம் ஒன்றின் உரிமையை விரைவாக வழங்குவதற்காக கூறி இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. குறித்த இரு அதிகாரிகளையும் அவிசாவளை மாநகர சபையினுள் இலஞ்சம் பெறும் போதே கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் 2022 ஆம் ஆண்டு இறுதி வரை கண்டுபிடிக்க முடியவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் பெறுமதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், ஆலயங்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 2022 ஆம் ஆண்டில் 27 வாகனங்களுக்காக 137 இலட்சம் ரூபா பராமரிப்புச் செலவீனமாக அலுவலகம் செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட போதிலும், அந்த வாகனங்கள் முறையான அனுமதியின் கீழ் முறையான வகையில் மாற்றப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை காட்டுகிறது.
சர்ச்சைக்குரிய Bupivacaine மயக்க மருந்து தொகுதியின் பரிசோதனைகள் நிறைவடையும் வரை, அதனை பாவனையில் இருந்து நீக்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் குறித்த மருந்துத் தொகுதியை விநியோகித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் S.D.ஜயரத்ன தெரிவித்தார். பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசேரியன், ஹேர்னியா சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அண்மையில் பதிவானது. மயக்கமடையச் செய்வதற்காக Bupivacaine என்ற மயக்க மருந்தினை பயன்படுத்திய பின்னர் அவர்களுக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக பின்னர் தெரியவந்தது.
சந்தையில் மீன்களின் விலையை குறைக்க முடியாது என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாதத்தின் முதலாம் திகதி தொடக்கம் வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணெயின் விலை 50 ரூபாவினாலும், தொழில்துறைக்கான மண்ணெண்ணெயின் விலை 134 ரூபாவினாலும் குறைப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மண்ணெண்ணெய் விலைத்திருத்தத்துக்கு அமைய மீன்களின் விலையை குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு 41 நாடுகளில் இருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த வருடம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மொழித்திறனை வளர்த்து இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வகையில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார். நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள்…