மாடுகளில் பரவி வந்த தோல் கட்டி வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. நேற்று (24) முதல் தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் பி.சி.எஸ் பெரேராவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாடுகளை தாக்கும் வைரஸ் நோய் நிலைமையை கட்டுப்படுத்துதல் மற்றும் புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகுவதைக் குறைத்தல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக டொக்டர் பெரேரா தெரிவிக்கின்றார். குறித்த அறிவித்தலின் பிரகாரம் குளியாப்பிட்டிய, பன்னல, கட்டுபொத, பிங்கிரிய, ரஸ்நாயக்கபுர, மஹவ, கல்கமுவ, கிரிபாவ, கொபேகனே, நிகவெரட்டிய, அஹெதுவெவ, அம்பன்பொல, கொட்டாவெஹர மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு…
Author: admin
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கி தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான டொக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு லார்வா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். காலநிலைக்கு ஏற்ப டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்தாவிடின் டெங்கு கொவிட் போன்ற ஆபத்தான நோயாக மாறும்…
திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலை நகர சபையும் பட்டினமும், சூழலும் பிரதேச செயலகமும் இணைந்து திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர், திருகோணமலை நகர சபை செயலாளர், திருகோணமலை பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, கடந்த காலங்களில் திருகோணமலையில் 20-க்கும் மேற்பட்ட மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மான்களின் பாதுகாப்பு, உணவு போன்ற விடயங்களைக் கவனிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் அதிகமான மான்களைக் கொண்ட இடமாக திருகோணமலை திகழும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் அறுபது வயதை எட்டிய அறுநூற்று நான்கு (614) மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் ஓய்வு பெறுவது சுகாதாரத் துறைக்கு பாரிய சிக்கலை உருவாக்கலாம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 15 மூத்த மருத்துவ நிர்வாகிகள், 7 துணை மருத்துவ நிர்வாகிகள், 5 துணை இயக்குநர் ஜெனரல்கள், 2 மருத்துவத் துறை கூடுதல் செயலாளர்கள், 250 சிறப்பு மருத்துவர்கள், 340 வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர். அறுபது வயதுக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் ஓய்வுக்கான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இவர்கள் ஓய்வு பெறவுள்ளனர். தற்போது சுமார் 750 சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. (இடமாற்றப் பதிவேடு 2023 இன் படி) மற்றும் சுமார் 350 மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ளனர். டிசம்பர் 2022 இல் சுமார் 250 சிறப்பு மருத்துவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி முடித்து நாடு திரும்பி னர், ஆனால் அவர்களில் 120…
சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதற்குத் தேவையான அச்சு இயந்திரங்களின் திறன் போதாமை காரணமாகவே சாரதி அனுமதி அட்டைகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அவர், தேவையான அட்டைகளை அச்சிடுவதற்கு 5 புதிய அச்சு இயந்திரங்கள் அவசியமெனவும் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதற்கு 5 இயந்திரங்கள் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்படுகின்றன. அவற்றில் சுமார் ஆயிரம் அட்டைகள் ஒரு நாள் சேவையின் கீழ் அச்சிடப்படுகின்றன. தற்போது சுமார் 8 இலட்சம் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள், அட்டைகள் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், புதிய அச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்து உரிய சாரதி அனுமதி…
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 05 புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளது. அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இது தவிர, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி பெரேரா, முன்னாள் சட்ட ஆலோசகர் ஜனாதிபதியின் சட்டத்தரணி தீபானி குமாரஜீவ, சட்டத்தரணி அமீர் பைஸ் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி ரமேஷ் ராமசாமி ஆகியோரின் பெயர்களும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்மொழியப்பட்டுள்ளன. இவர்களது பதவிக்காலம் உரிய முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதியின்…
ஈரானில் இருந்து பெறப்படும் எரிபொருட்களுக்கு பதிலாக இந் நாட்டு தேயிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான இரு நாட்டு அரசுகளும் இடையில் கடந்த 2021 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தான நிலையில் எதிர்வரும் ஜூலையில் இருந்து இந்த முறை செயற்படுத்தப்படவுள்ளது. இதன்போது, ஈரானிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக முதல் தொகுதி தேயிலை உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை ஈரானுக்கு 48 மாதங்களுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பண்டமாற்று வர்த்தகம் அல்லது பண்டமாற்று முறையின் கீழ் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த தேயிலைக்கு, இலங்கையில் உள்ள தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை ரூபாயில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொடுப்பனவுகளை செலுத்தவுள்ளது. மேலும், ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்கள் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு ரியால்களில் இது தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் ஜூன் 25ஆம், 26ஆம் திகதிகளில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை…
நாட்டில் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, மே மாதம் நாட்டின் பணவீக்கமானது 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கமானது 33.6 வீதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2022 CGE உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாகும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பரீட்சார்த்திகள் நேற்றைய தினம் தமது கடமைகளில் இருந்து விலகினர். ஆசிரியர்களின் கவலைகளை அரசு நிவர்த்தி செய்து, அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள், அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்படுவது மிகவும் முக்கியமானது. அவர்களின் கடமைகளை திறம்படச் செய்வதற்குத் தேவையான ஆதாரங்களையும் ஆதரவையும் அவர்களுக்கு வழங்குவதும் இதில் அடங்கும். இந்த சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் 2022 CGE A/L விடைத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமின்றி நடைபெறுவதை உறுதி செய்ய…