இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான முழுமையான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் படி, 175 பேர்ச்சஸ் கொண்ட காணியொன்று இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜெனரல் கமல் குணரத்ன, இதற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தினார். இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) 78வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று அத்திடியவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டார். நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ஆற்றிய, உயிரிழந்த மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உன்னத சேவைகளையும் நினைவு கூர்ந்தார். அண்மைக் காலத்தில் நாம் நடைமுறைப்படுத்தியதைப் போன்று, தற்போதைய ஜனாதிபதியின் வழிகாட்டுதலுடன் SLESA மற்றும் அதன் சேவைகளை வளப்படுத்துவதற்கும் நாங்கள்…
Author: admin
ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 9,000 போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்களை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை ஹிரணவில் பகுதியில் வைத்து வேன் மற்றும் காருடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் மானமுல்ல மற்றும் ஹிரன பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். 10 மாத்திரைகள் 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 12 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி வீழ்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து பொலிஸ் மன்னிப்புக் கோரியுள்ளது. 1952ஆம் ஆண்டில் கார்டிஃப் நகரத்தில் ஆடை வியாபாரியான Lily Volpert என்ற பெண்ணை கொலை செய்ததற்காக, மஹ்மூத் மட்டான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மட்டான் குற்றம் புரியவில்லை என்று நிரூபிக்க அவருடைய மனைவியும், மகன்களும் கடந்த 46 ஆண்டுகளாக போராடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. இந்நிலையில், நீதி தாமதமாகவே கிடைத்துள்ளதாக மட்டானின் பேத்தி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 5வது பாதையிலுள்ள தனிப்பட்ட இல்லத்தில் இருந்து கடந்த ஜூலை 9ஆம் திகதி வன்முறைக் கும்பல் தீ வைத்து எரித்து சூறையாடப்பட்டிருந்த வீட்டில் இருந்து திருடப்பட்ட புத்தகங்களையும் புத்தர் சிலையையும் திருப்பிக் கொடுக்க ஒருவர் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்தித் தகவல்களின்படி, பிலியந்தலையில் வசிக்கும் நபர், ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொண்டு, தனது நடவடிக்கைகளின் சட்டரீதியான விளைவுகளை உணர்ந்த பின்னர், திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பாகக் கோரியுள்ளார். மேலும், இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும் , 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 21 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளன. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
NPCI (National Payments Corporation of India) தரவுகளின்படி, UPI (Unified Payments Interface) நெட்வொர்க் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 10.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 657 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியுள்ளது. ஜூலை மாதத்தில் 629 கோடியாக இருந்த பரிவர்த்தனைகளின் அளவு மாதந்தோறும் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் முறையாக ஜூன் 2022 இல் UPI நெட்வொர்க் ஒரு மாதத்தில் 600 கோடி பரிவர்த்தனைகள் என்ற மைல்கல்லைக் கடந்தது. மறுபுறம், AePS (ஆதார்-இயக்கப்பட்ட கட்டண முறை) பரிவர்த்தனைகள் மாதத்தில் ஒரு சரிவைக் கண்டதாக NPCI தரவு காட்டுகிறது. AePS நெட்வொர்க் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ஆகஸ்ட் மாதத்தில் 10.6 கோடியாக இருந்தது, ஜூலையில் 11.0 கோடியாகவும், ஜூன் மாதத்தில் 12.1 கோடியாகவும் இருந்தது. AePS பரிவர்த்தனைகளின் மதிப்பும் இந்த காலகட்டத்தில் 16.1 சதவீதம் சரிந்து ஆகஸ்ட் மாதத்தில் ரூ.27,186 கோடியாக இருந்தது. UPI பரிவர்த்தனைகளில் வளர்ச்சி ஆகஸ்ட் மாதத்தில் UPI…
பசியாலை அல்கம நீர்வீழ்ச்சியில் நேற்று (04) நீராடச் சென்ற 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பத்தினருடன் குறித்த நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றிருந்த இளைஞன் நீருக்குள் குதித்த நேரம் நீருக்கடியில் இருந்த கல்லொன்றில் தலை மோதி குறித்த இடத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பேருவளை மருதானையைச் சேர்ந்து பைசாம் பைரோஸ் என்பவர்
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ கோஃப் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார். இப்போட்டியில், நிக் கிர்கியோஸ், 7-6, 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதேபோல, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ கோஃப், சீனாவின் ஸாங் ஷுவாய்யுடன் மோதினார். இப்போட்டியில், கோகோ கோஃப், 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2022க்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.