இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலைமையில் சற்று அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Author: admin
யாழ்.நகரின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய குழி காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில் பயணிக்கும் பொதுமக்கள் பாரிய இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர். மாநகர சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் வீதியில் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள குழி திருத்தப்படவோ அல்லது வீதியால் பயணிப்போருக்கு அவ்விடத்தில் பாரிய குழி உள்ளது என்ற எச்சரிக்கை போடுவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த குழி வீதியின் நடுவில் காணப்படுவதன் காரணமாக அவ்விடத்தில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றது.
சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், இந்தியா வெறும் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஆரம்பித்த அடுத்தடுத்த கால்பகுதிகளில் இலங்கை அணி அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தியது. இதன்மூலம் இரண்டாவது கால்பகுதியில் 24-1, மூன்றாவது கால்பகுதியில் 21-7 மற்றும் நான்காவது கால்பகுதியில் 23-4 என இலங்கை அணி புள்ளிகளை பெற்றுக்கொண்டது. எனவே, இறுதியாக இலங்கை அணி 102-14 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. இலங்கை அணியின்…
மின்சாரம், பெற்றோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிட்டு செப்டம்பர் 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். அதன்படி மின்சாரம் வழங்கல், மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொனறினால் வழங்கப்படும் சேவைகள் வழமையான பொதுமக்கள் வாழ்வை கொண்டுநடத்துவதற்கு இன்றியமையாததெனவும் மேற்கூறப்பட்டுள்ள சேவைகளுக்கு இடையூறாகக்கூடுமென அல்லது தடையாகக்கூடுமென்பதைக் கருத்திற்கொண்டு எந்தவொரு அரச கூட்டுத் தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச்சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றின் மூலம் வழங்கப்படும் பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1. மின்சாரம் வழங்கல் 2. வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள் , மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும்…
நாளாந்தம் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 707 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து செயற்படுமாறும் முகக்கவசம் அணிந்து செயற்படுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பொலிஸார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக கொலம்பிய ஜனாதிபதி Gustavo Petro தெரிவித்துள்ளார் கொலம்பியாவின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதியாக கடந்த மாதம் Gustavo Petro பொறுப்பேற்றதன் பின்னர், பொதுப் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான தாக்குதல் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு 13 பேர் இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிலுள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ்ப்பிரிவில் கொழுந்து பறித்த மக்களே இவ்வாறு இன்று நண்பகல் வேளையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, குளவி கொட்டுக்கு உள்ளானவர்களில் 10 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்கவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வர் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய ஒன்பது பேர் வெளி நோயாளர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது, அத்துடன் குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் உடன் தோட்ட அம்பூலன்ஸ ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடதக்கது.
கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். போராட்டங்களை தொடர்ந்து இலங்கையை விட்டு வெளியேறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புளியங்குளம் முத்துமாரி நகர் கிராமத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் வாணி விளையாட்டு கழகத்திற்கான மைதானம் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனால் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிராமப்புற நகரங்களை தேசிய ரீதியில் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, கழக உறுப்பினர்கள், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று (02)உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை உறக்கத்தில் இருந்த கணவன் மீதே மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.