Author: admin

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் காரில் காணப்பட்ட இரத்த மாதிரி யாருடையது என்பதனை அறிந்துக்கொள்வதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிலரின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இனுடைய உத்தரவிற்கு அமைய குறித்த இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. தொழிலதிபர் தினேஷ் சாஃப்டரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போது கடமையாற்றிய 10 பேரிடமே இரத்த மாதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் இன்று (08) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரைிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதன்போது நுவரெலியா நகரை சிறப்பானதொரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கருத்தகளும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய ஆய்வுகளின் பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென குழுவொன்றும் அமைக்கப்பட்டது.…

Read More

களுத்துறை பாடசாலை மாணவியின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதி கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முன்னதாக மாணவி உயிரிழந்தது தொடர்பாக விடுதிக்கு அவருடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் நேற்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் போது குறித்த பாடசாலை மாணவி நேற்று (06) மாலை 6.30 மணியளவில் மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் அப்பகுதியில் உள்ள விடுதிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த விடுதியில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார். பின்னர், ஒரு இளம்…

Read More

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை காத்திருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுக்கள் நியமனம் தொடர்பில் எமது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவியபோது, ​​தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களின் நியமனங்களை தாமதப்படுத்துவது வீண் செயலாகும். அந்த ஆணைக்குழுக்களை விரைவில் நியமித்து முடிப்பேன் என நம்புகின்றேன் என்றார்.ஏற்கனவே அரசியலமைப்பு சபையினால் ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலமைப்பு சபைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக உண்மைகளை சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள…

Read More

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிகரித்து வரும் தொற்று நோய்களுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது பெய்து வரும் கடும் மழையினால் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்கமாறும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

Read More

இலங்கை அதிபர் சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முகமாக நடத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை அவர்கள் கல்வி அமைச்சில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Read More

ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை குற்றப்பரம்பரையாக்கி, மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்துத் துறையில் தற்போது 83 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 60 லட்சம் வாகனங்கள் மட்டுமே QR குறியீடு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேலாக வருமான அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்கள் மாவட்ட வாகன பரிசோதகர்கள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு தகவல் அமைப்பிலிருந்து நீக்கப்படும் என நிஷாந்த அனுருத்த மேலும் தெரிவித்தார்.

Read More

ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தி அசோசியேட்டட் பிரஸ் (AP) ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 2 எண்ணெய் கப்பல்கள், ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான ஹார்முஸ் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன. குறித்த 2 கப்பல்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட போதிலும், அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டவையாகும் என்பது தெளிவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று, ஈரானின் துணை இராணுவப் புரட்சிக் காவலர்களால், இரண்டாவது கப்பலான பனாமாவின் நியோவி கப்பல், ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள புஜைராவுக்குச் செல்லும்போது கைப்பற்றப்பட்டது. இந்தக் கப்பலிலேயே, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படையினர் பணியாற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Read More

ஆசிய நாடு­க­ளி­ல் இ­ருந்து கடத்­திக் கொண்­டு­வ­ரப்­பட்ட 1,000 ற்கும் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸில் நாட்டில் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு கடத்தப்பட்டவர்களை வைத்து கடத்தியவர்கள் இணைய மோச­டிச் செயல்­களில் ஈடு­ப­டுத்­தியுள்ளனர். இதன்போது, 1,090 பேர் மீட்­கப்­பட்­ட­தாக தேசிய காவல்­து­றை­யின் இணை­யக் குற்­றத் தடுப்­புப் பிரி­வுக்கான பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்ளார்.தென்­கி­ழக்­கு அ­சிய பகுதிகளில் இடம்­பெற்­று­வ­ரும் இணைய மோச­டிச் செயல்­கள் அண்மைக் காலங்களாக உல­க­ள­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுவோர் பல­ வே­ளை­களில் போலி மின்­னி­லக்க நாண­யங்­களில் முத­லீடு செய்­வதை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் செயல்­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More