வரலாறு நிற்கும் தருணம் இது; ஒரு நிமிடம், ஒரு மணிநேரம், ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்கு; வரலாறு நிற்கும் தருணம் இது. இரண்டு உரைகள். ஒரு வாழ்க்கையும் ஆளுகையும் முழுவதுமாக இரண்டு வெவ்வேறு சகாப்தங்களில் இருந்து பல தசாப்தங்களை ஒன்றாக இணைக்கும் நூலை ஒளிரச் செய்கின்றன. இரண்டு உரைகளிலுமே ஒரு நாற்காலி, ஒரு மேசை, ஓர் ஒலிவாங்கி, ஒரு பேச்சு. இரண்டும் அந்த உயர்ந்த குரல், துண்டு துண்டாகத் துல்லியமாக வந்து விழும் உயிரெழுத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டவை. பிறர் முன் உரையாற்றுவது குறித்த சிறு தயக்கம், அவரை விட்டு ஒருபோதும் விலகியது போல் தெரியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒரு பயங்கரமான குளிர்காலத்தில் பிரிட்டிஷ் மக்கள் அவதிப்பட்டாலும், ஒரு தருணம் மாத்திரம் சூரிய ஒளி பட்டு இதமானதாக இருந்தது. ஓர் இளம் பெண், உண்மையில் ஒரு சிறுமியை விட முதிர்ந்த தோற்றத்துடன், மேலே இழுத்துக் கட்டப்பட்ட கருமையான கூந்தலுடன்,…
Author: admin
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 6 தசம் 2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளில் 30% உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இன்று பெற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார். 54 போட்டிகளில் அணியின் தலைராகவும் 145 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பின்ச், டி20 அணியை தொடர்ந்து வழிநடத்துவார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 2013 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆரோன் பின்ச், அவுஸ்ரேலிய அணிக்கு 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்து கொடுத்தார். அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஓய்வை அறிவித்துள்ளதாக ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். கடந்த பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் ஆரோன் பின்ச் ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி, மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் இணைந்து போராடும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச பயங்கரவாதத்தின் ஊடாக நாட்டின் மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரை நசுக்கும் கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் முன்னெடுக்கும் ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்தா நிகழ்வில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 37 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை கடுமையாக சாடிய சஜித் பிரேமதாச, அமைச்சர்களின் செலவுகளுக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது.
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,725 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் இன்று (10) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் சமந்தா பவர் ஆராயவுள்ளார். இதேவேளை, சமந்தா பவர் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நிகழ்வொன்றில் நேற்று (09) உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.