Author: admin

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 வீதமாக பதிவானதுடன், அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 9.4 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பங்கள், பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்ட உணவு பாதுகாப்பின்மை பிரச்சினையினால் சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவிடும் செலவுகளை குறைத்துக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில்…

Read More

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பில் திறைசேரியின் செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார். ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு திறைசேரி அனுமதியளிக்காது என உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு SLT PLC இன் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் 49.50 சதவீத பங்குகளை திறைசேரி வைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் திறைசேரியிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்துக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளதாக திறைசேரியின் செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபைக்கு தெரிவித்துள்ளார். லங்கா ஹொஸ்பிடல் பிஎல்சியின் பங்கு மூலதனத்தின் 51.34 சதவீத பங்குகளும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது. இந்த நடவடிக்கையானது பல பிரிவுகளை ஒன்றிணைத்துள்ளது மற்றும் SLT இன் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை…

Read More

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி அதிகளவான மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்த சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை அதிகளவான பியர் மற்றும் மதுபான போத்தல்கள் சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி விற்பனையில் ஈடுபடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகரின் வழிநடத்தலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதன் போது 37 வயதான துறைநீலாவணை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைதான நபரிடமிருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் பெறுமதியானவை எனவும் அத்துடன் அளவிற்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில்…

Read More

இலங்கை மின்சார சபை எழுத்துமூலம் கோரியவாறு 30 நிலக்கரி கப்பல்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் 28 மற்றும் 29 ஆகிய கப்பல்களில் நிலக்கரிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிலக்கரி கொண்டுவரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 30 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்களுக்கு மட்டுமே முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 8 கப்பல்கள் கடன் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Read More

07 கிலோ எடையுள்ள 15 கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரை சுங்க வளாகத்தை கடந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது. 43 வயதுடைய வர்த்தகரான இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று காலை (07) காலை 09.20 மணியளவில் Fly Dubai Airlines இன் F.Z.-547 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு சுங்கச்சாவடி வளாகத்தில் இருந்து வெளியே வந்து விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார். பயணி தனது இடுப்பில் 08 பொதிகளில் மறைத்து வைத்திருந்த 04 கிலோ 400 கிராம் எடையுடைய 42 தங்க பிஸ்கட் அரை தங்க பிஸ்கட் மற்றும் 02 கிலோ…

Read More

மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன் படுத்திய கார் ஒன்றையும் மீட்டுள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மன்னாரிலிருந்து சென்ற குறித்த காரை பின் தொடர்ந்து சென்ற புலனாய்வுப் பிரிவினர் குஞ்சுக்குளம் அருகில் உள்ள விகும்புர பகுதியில் வாகனத்தை சோதனை செய்தனர். இதன் போது வாகனத்தினுள் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெருமதி 12 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டியை சேர்ந்த (38) வயது மற்றும் மன்னார் அடம்பனைச் சேர்ந்த (27) வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் சந்தேக நபர்கள் மற்றும் வாகனம் உள்ளிங சான்றுப்…

Read More

மின்சார கட்டணத்தை 20 சதவீதம் குறைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் குறைந்த மின்தேவை, மாற்று விகிதங்கள், எரிபொருள் விலை குறைப்பு போன்றவற்றின் அடிப்படையில் மின்சார நுகர்வோர்கள் உடனடியாக 20 சதவீத மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்று (07) மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த 2 பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான முருகன் சிலை ஒன்றை தம் உடமையில் வைத்திருந்த தன் அடிப்படையில் குறித்த மூவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Read More

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், கருத்து தெரிவித்த போதே வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறித்த விடயத்தை தெரிவித்தார்.

Read More