Author: admin

சீனாவின் ஜனாதிபதியாக 3வது முறையாகவும் Xi Jinping இன்று பதவியேற்றார். 3ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட சீனாவின் தேசிய மக்கள் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டு இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சீனாவில் மாவோ சேதுங்கிற்கு பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராகவும் 69 வயதான Xi Jinping வரலாற்றில் பதிவாகியுள்ளார். அத்துடன் அவர் இன்னும் 2 நாட்களில் அமைச்சரவைக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Xi Jinping எதிர்வரும் 5 ஆண்டுகள் சீனாவின் அதிபராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அதிகாரிகளால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

Read More

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைவடையும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையிலேயே எதிர்காலத்தில் கொள்வனவு செய்யப்படும் என அவர் கூறினார். அதற்கமைய, இந்த விலைக் குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எரிபொருள் விலை குறைக்கப்படும் பட்சத்தில் ஏனைய பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்துள்ளார். வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கந்தசாமி குணரட்ணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39 ஆயிரம் ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார். ஆனால், தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலவரப்படி கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியது.

Read More

ஜனாதிபதியின் அலுவலக செலவுகளை ஈடு செய்யும் வகையில், மேலும் 1800 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, எல்லை நிர்ணய குழுவின் செலவீனங்களை ஈடு செய்வதற்காக 7.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகையை ஒதுக்குவதற்கான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு குறை நிரப்பு பிரேரணைகளுடன் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் சட்ட நிறுவனங்களின் செலவுகளை ஈடு செய்யும் ஆறு குறைநிரப்பு பிரேரணைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன

Read More

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அரிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா, உக்ரைன் முழுவதும் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். படையெடுப்பின் ஆரம்ப மாதங்களில் இருந்து ரஷ்யா கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவவில்லை என கூறப்பட்ட போதும், தற்போது நேற்று (வியாழக்கிழமை) முதல்முறையாக உக்ரைன் மீது குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பு உட்பட உயர் துல்லியமான நீண்ட தூர வான், கடல் மற்றும் நில அடிப்படையிலான ஆயுதங்கள் உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பின் முக்கிய தளங்களை தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் உறுதிப்படுத்தினார். ஜனவரி மாத இறுதியில் இருந்து உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களின் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதனிடையே, 34 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஈரானில் தயாரிக்கப்பட்ட நான்கு ஷாஹெட் ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் கூறியது. ஆனால், ஆறு கின்சல் பாலிஸ்டிக் ஏவுகணைகள், கே.எச்.22…

Read More

நாட்டில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில், புகை வெளியேறுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வளி வெளியேற்றும் வேலைத்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More