Author: admin

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் பழைய வாக்களிப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் பல தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க முயற்சித்தார். இதேவேளை, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பான சட்டமூலம் ஏப்ரல் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் 2023 இலக்கம் 04, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமாக அமுலுக்கு வரும். இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவும், பொது மனுக்கள் தொடர்பான குழுவும்…

Read More

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் பொலிஸ் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சமர்ப்பித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளது. தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் நியாயமற்றது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டை இன்று பொலிஸ் ஆணைக்குழு பரிசீலித்து விசாரணைகளை மேற்கொள்ளும் என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தின் இறுதி நாள் இன்று எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று வழமையான நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் பதவிக்கு ஊழல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நிலைய அதிபர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் அதிகாரிகள் நல்ல பதிலை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்திருந்தார்.

Read More

முட்டைகளின் விலைகள் கட்டுப்பாட்டு விலையைக் காட்டிலும் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி வெள்ளை முட்டை 40 ரூபாய் படியும், சிவப்பு முட்டை 41 ரூபாய் படியும் மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை சில்லறை அங்காடிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் 44-45 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

Read More

கனமழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு புரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் டெங்கு இருந்தால் இரத்தப்போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர், காய்ச்சலைக் குறைக்கவும் வலியைக் குறைக்கவும் பாராசிட்டமால் மாத்திரமே உட்கொள்ளுமாறும் தொடர்ந்து இரண்டாவது நாளாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் ருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் டொக்டர் நிமல்கா தெரிவித்துள்ளார். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதோடு ,நுளம்புகள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்க பழைய டயர்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் கொள்கலன்கள் போன்றவற்றை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கூற்றுப்படி, இவ்வாண்டில் இதுவரை 31,450 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , மேலும் அதிக எண்ணிக்கையிலானநோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் .

Read More

நிலைய பொறுப்பதிகாரிகளின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மலையக புகையிரத சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டன. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணிக்கும் பொடி மெனிகே ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. புகையிரத நிலையங்களினால் பயணச்சீட்டு வழங்கப்படாமையால் பொடி மெனிகே ரயிலில் பயணிகள் இலவசமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடரட்ட ரயில்பாதையில் பல ரயில்கள் சேவையில் ஈடுபடவில்லை காரணமாக பொடி மெனிகே ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் என பெருந்தொகையான மக்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், 8 நாட்கள் காவலில் விசாரிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கடந்தாண்டு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார். அதன் பிறகு, பயங்கரவாதம், மத நிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 140-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், பொலிஸாரால் கைது செய்யப்படுவதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். இம்ரானை பொலிஸாா் கைது செய்யா விடாமல் அவரது இல்லத்தைச் சுற்றிலும் பிடிஐ கட்சி ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்ததால் அவரைக் கைது…

Read More

மண்சரிவு எச்சரிக்கையானது நாளை காலை 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும் நாளை காலை 9 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும். மேலும், காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், யட்டியந்தோட்டை, ரம்புக்கனை, தெரணியகல, மாவனெல்ல, கேகாலை மற்றும் கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிப்பவர்களுக்கும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

சட்டவிரோதமான முறையில் 607.5 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் அதற்கான அபராதத் தொகையை திறைசேரிக்கு செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த அபராதத் தொகையான 160 மில்லியன் ரூபாவை திட்டமிட்டபடி நிறுவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தடைசெய்யப்பட்ட சிவப்பு சீனியை வெள்ளைச் சீனி என்று கூறி இறக்குமதி செய்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

Read More