Author: admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை, மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பினாலும் வரி அதிகரிப்பினாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தை பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அதைக் குறித்த ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம். ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பது உரிய…

Read More

காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரினால் இந்த விபச்சார விடுதி நிர்வகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெனேகம வில்லிம்புல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், ஹோமாகம, பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண், தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் மற்றும் தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

உலகின் பல இடங்களிலும் மர்மப் பொருட்கள் வானில் தொடர்ந்து பறக்கும் நிலையில், இந்தியாவிலும் முக்கிய தீவுக் கூட்டங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தான் தங்கள் வானில் மர்மப் பொருட்களைப் பார்த்ததாக கூறியிருந்தனர். இதற்கிடையே இப்போது இந்தியாவிலும் இதுபோன்ற மர்மப் பொருட்கள் வானில் பறப்பது காணப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு, வங்கக் கடலில் அமைந்துள்ள இந்தியாவுக்குச் சொந்தமான தீவு கூட்டம் ஒன்றில் அங்குள்ள உள்ளூர்வாசிகள் வானில் ஒரு அசாதாரண பொருளைக் கண்டுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வீழ்த்தியதைப் போன்ற ஒரு பெரிய பலூனை அவர்கள் வானில் கண்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அது என்னவென்று அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.. அந்தமான் மற்றும் நிக்கோபாரின் சில தீவுகளிலிருந்து இந்த பலூன் தெளிவாகத் தெரிந்துள்ளது. பொதுமக்கள் பலரும் அதை போட்டாவோக எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படியே ஒரே நேரத்தில் பலரும்…

Read More

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதலாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்தார். அமைதிக்கான தேடலில் சீனா ஈடுபட்டிருப்பதை இந்த முன்மொழிவு அடையாளம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்காது என்று தான் உண்மையில் நம்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரஷ்யா தனது படைகளை உக்ரைனிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று சீனா குறிப்பாகக் கூறவில்லை என்றாலும் சீனாவின் அமைதி திட்டங்களை ரஷ்யா பாராட்டியது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகக் கூறினார். இந்த கூற்றை சீனா கடுமையாக மறுத்தது. அமெரிக்க ஊடகங்கள் மீண்டும் சீன அரசாங்கம் ரஷ்யாவிற்கு…

Read More

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் புல்லை விவசாய பயிராக பெயரிட விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் கால்நடைத் தீவனத்திற்குத் தேவையான புல் நிறுவன் அல்லது தனிப்பட்ட முறையில் முறையாக பயிரிடப்படாததால், கால்நடைத் தீவனத்திற்குப் போதுமான புல் கிடைக்காமை இலங்கையின் கால்நடை உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பசுக்களில் இருந்து தினசரி பெறும் பால் அளவு குறைந்து வருவதற்கு உயர்தர புல் இல்லாதமை ஒரு காரணம் என்று கண்டறிந்துள்ளனர். இதன்படி, மற்ற பயிர்களை பயிரிட முடியாத நிலங்களில், அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர புல் வகைகளான CO3, CO5, பச்சோன் (Pachon), நேப்பியர்(Napier)வகை புல் வகைகளை பயிரிட விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 47,000 ஏக்கர் தரிசு விவசாய நிலங்கள் காணப்படுவதுடன், மேல் மாகாணத்தில் பயிர்களை விளைவிக்க முடியாத சுமார் 11,000 ஏக்கர் தரிசு நிலங்களும்…

Read More

நுகர்வோரிடமிருந்து 8400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் 6200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உள்ளாட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சி சபைத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் 3 ஆயிரத்து 100 அரச ஊழியர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக அவர்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளா். எனினும், தேர்தல் நடக்காது என்ற தொனியில் ஜனாதிபதி நேற்று கருத்து வெளியிட்டுள்ளார். அப்படியானால் அரச ஊழியர்களின் நிலை என்ன? ஒன்று அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என்று கூறிய பேராசிரியர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிம்ச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கொழும்பில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்றார்.

Read More