அமைச்சர்களுக்கு இணக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை பயன்படுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நொரோச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். ஊவா பரணகம, பலகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிவாயு நெருக்கடியால் ஐரோப்பியர்கள் அடுத்த குளிர்காலத்தில் வேறு நாடுகளுக்கு செல்ல தயாராகும் நிலையில் இந்த நாட்டில் மின்வெட்டு காலம் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ள காரணத்தால் சுற்றுலாத்துறைக்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
Author: admin
மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.
கஜமுத்துக்களுடன் ஹூரகஸ்மங்ஹந்திய பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 43 வயதுடையவர் எனவும், அவர் ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளுக்கு விடைகொடுத்தார். அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்த அவர், நேற்று லண்டனில் ஆரம்பித்த லேவர் கிண்ணத் தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் பங்கேற்றார். இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ஐரோப்பிய அணியில் இடம்பெற்றுள்ள ரொஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் மற்றும் ஒரு முன்னணி வீரரான ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ – ஜெக் சாக் இணையுடன் போட்டியிட்டனர் இந்த போட்டியில் ரொஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ – ஜெக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவினர். இதையடுத்து டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரொஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார். ரொஜர் பெடரர், நடால் மற்றும் பிற வீரர்களைக் கட்டியணைத்து அழுதார். பின்னர்…
கொழும்பில் சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்து டீன்ஸ் வீதியூடாக மருதானை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கு முன்பாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்துகொண்டார். நிகழ்வில் தொல்காப்பியரின் சிலையினை ஆசிரியர் சு.சிவச்சந்திரன் திறந்துவைத்ததோடு அதனை தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி கௌரவம் செலுத்தப்பட்டது. மேலும் நிகழ்வில் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், உயர்தர்பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றமாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி 86 டொலராக காணப்பட்ட மசகு எண்ணெணை பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 78 டொலர்களாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின்னரான காலப்பகுதியில் மசகு எண்ணெணை குறைந்த விலையில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட்டி வீதங்கள் அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளமை காரணமாக மசகு எண்ணெணை விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
கட்சியின் அடுத்த சம்மேளனத்தின் போது புதிய தவிசாளர் நியமிக்கப்படுவார், ஆகவே அப்பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் முடிந்தால் தன்னை நீக்கி காட்டுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சவால் விடுத்துள்ளார். டலஸ் அழகப்பெருமவும் இந்த சவாலை விடுத்திருந்தார். டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி விடுத்துள்ள சவாலையடுத்தே இவ்வாறான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த கட்சி சம்மேளனத்தின்போது பதவிகள் பறிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுன, சூளுரைத்துள்ளது.
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி ஊடாக 825 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை மேலும் தெரிவித்துள்ளது. உரத் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது