நாட்டில் தற்போது கடனட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 40 ஆக குறைவடைந்துள்ளது. இதேவேளை நாட்டில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர் அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை வாகனங்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் உதிரிபாகங்கள் , வாகனங்களை திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Author: admin
இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 81,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, இந்த மாதத்தின் முதல் பகுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 66,250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 22 கரட் தங்கம் ஒரு பவுண், ஒரு இலட்சத்து 58,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனியார் ஆலைகளில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இதன் காரணமாக நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கூடுதல் வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. 5.2 மில்லியன் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவை அதிகரிப்பதற்கு உதவுவதற்காக இரண்டாவது அல்லது பல வேலைகளுக்குத் திரும்பியுள்ளதாக, காப்பீட்டு நிறுவனமான ரோயல் லண்டனின் அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் 10 மில்லியன் பேர் அதைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர். மற்றவர்கள் மிக நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் என ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் 4,000 பிரித்தானிய வயது வந்தவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாழ்க்கைச் செலவு 40 ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது உணவு மற்றும் எரிசக்தியின் விலை உயர்வால் இயக்கப்படுகிறது. உயரும் செலவுகள் வரவு செலவுத் திட்டங்களில் விழுகின்றன, விலை உயர்வு ஊதியத்தை விட அதிகமாக உள்ளது.
உலகம் எதனை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிவதே இல்லை. அந்தளவுக்கு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல்வேறான கூடாத பழக்கவழக்கங்கள் தொற்றிக்கொண்டுள்ளன. மாணவியொருவர் தன்னுடைய காதலனின் பிறந்த நாளன்று, ஏனைய மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை வகுப்பறைக்குள் வைத்தே, பியர் பார்ட்டி நடத்திய சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கான அந்த மாணவி, தன்னுடைய வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாவை களவெடுத்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. காதலர்களான மாணவனும் மாணவியும் ஒரே வகுப்பில், தரம் 10 இல் கல்விப்பயிலுகின்றனர். மாணவனின் பிறந்த நாளன்று, வகுப்பறையில் சிறிய வைபவமொன்றை நடத்துவதாக அதிபர், ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் அதிபரும் ஆசியர்களும் அந்த வகுப்பறையை முதலில் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அங்கு பல்வேறு வகையான பலகாரங்கள், இனிப்பு பண்டங்கள் இருந்துள்ளன. அதன்பின்னரே, அங்கு பியர் கேன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதனை கேள்வியுள்ள பாடசாலை நிர்வாகம் அந்த பிறந்த நாள் வைபவத்தை இரத்துச் செய்தது. சம்பந்தப்பட்ட மாணவ,…
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்கள் இழப்பு மற்றும் சேதம் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், சுங்கச்சாவடியில் பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக பொருட்களை அனுப்பும் போது இந்த சம்பவங்கள் பெரும்பாலும் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் தட்டுப்பாடு போன்ற ஏனைய பிரச்சினைகளினால் வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார். வாகனங்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும், உதிரி பாகங்கள் மற்றும் வாகன பராமரிப்பு கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார். அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் காரணமாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தைக்காக ஒதுக்கப்பட்ட மாகாண நிதி, திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லைஎன்பதனால் சிறுவர் இலங்கைகளுக்கு அனுப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 வயதுச் சிறுமியை முகமூடி நபர் ஒருவர் கடத்திச் செல்ல முற்பட்ட போது, அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஓடிச்சென்று சிறுமியைக் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இச் சிறுமி நேற்று பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, புதரில் மறைந்திருந்த முகமூடி அணிந்த நபரொருவர், சிறுமி அணிந்திருந்த கழுத்துப் பட்டியால் கைகளை பின்னால் கட்டி சிறுமியை கடத்த முற்பட்டுள்ளார். அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் தெய்வாதீனமாக அதனை கண்டு ஓடிச்சென்று சிறுமியைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர் வீல் chair இல் அமர்ந்திருக்க, ஏதோ போட்டி ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவன் அருகே அவரது நண்பர் ஒருவர் இருக்கிறார். அந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உணவு எடுத்து ஊட்டி விடுகிறார் சக மாணவன். ஏறக்குறைய ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து தனது நண்பனுக்கு அந்த மாணவன் செய்யும் செயல் தொடர்பான வீடியோ தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.