Author: admin

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சார் பணியாளர் பற்றாக்குறை தொடர்பில் பல்கலைக்கழகங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக் கடிதங்களுக்கு அமைவாக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைியின் அனுமதியின் படி, 2023 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஓய்வுபெறும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்குச் சமமான தொகை ஆளணியை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும், 2023 ஆம்…

Read More

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியினால் யூரியா உரத்தின் விலையானது பாரியளவில் அதிகரித்து, பின்னர் மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது. தற்பொழுது, இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை வீழ்ச்சி காரணமாக யூரியா உரத்தின் விலை மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் 31,200 மெட்ரிக் டன் யூரியா உரம் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இவை விற்பனைக்காக சந்தைக்கு வரும் போது யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். அதேசமயம், தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக யூரியா உரத்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரை ஹெக்டேருக்கு குறைவாக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா உரம் இலவசமாக வழங்கும் திட்டம் நடைபெறுகிறது. குறித்த நடவடிக்கை இதுவரை ஏழு மாவட்டங்களில் செயற்படுத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

விகாரைகளில் சேவை செய்வதற்காக சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சேவை தொடர்பில் சரியான தகவல் எதுவும் இல்லை. இதற்காக வருடத்துக்கு 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்த நிலையை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிவில் பாதுகாப்பு படையில் சுமார் 33 ஆயிரம் பேர் வரை இருக்கின்றனர். இவர்கள் எல்லை கிராமங்களை பாதுகாக்கும் கடமைகளில் இருந்து வருகின்றனர். அவர்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாகும். இவ்வாறான நிலையில், இவர்கள் நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் தங்களுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து…

Read More

இலங்கையில், வீதி விபத்துக்களினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 2 ஆயிரத்து 900 பேர் மரணிப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அத்துடன், 7 ஆயிரத்து 700 பேரளவில் காயமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாளொன்று சுமார் 8 பேரளவில் வீதி விபத்துக்களினால் மரணிப்பதுடன், 22 பேரளவில் காயமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகுவதாகவும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

Read More

இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன் 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்பட்ட இரசாயன உரங்கள் மீதான தடையானது தேயிலை உற்பத்தியில் 16% வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று சந்தையில் போதியளவு உரம் காணப்பட்டாலும் விலை மிக அதிகமாகவே காணப்படுவதாக தோட்டக்காரர்கள் சங்கத்தின் செய்தியாளர் ரொஷான் ராஜதுரை தெரிவிக்கின்றார். மற்ற இடுபொருட்களின் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், 2021ல் 50 கிலோ உர மூட்டை ரூ.1500 ஆக இருந்த ரூ.20,000 ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். 2023 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருவாய் 1.4 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதற்கு குறைந்தது 250 மில்லியன் கிலோகிராம்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

Read More

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் வாரத்தில் நியமிக்கப்படுவார் என ஆணைக்குழுவின் உறுப்பினர் டக்ளஸ் நாணயக்கார தெரிவித்திருந்தார். இரண்டு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் உள்ளதால், அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதன் பின்னர் உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதம் 30ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் இந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நிதிக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்.

Read More

6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டார். திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் குறித்த, அவனுடைய தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனுக்கு போதைப்பொருள் கொடுத்து சிறுவனின் வீட்டில்…

Read More

நாட்டில் எரிபொருள் விலையானது அடுத்த வாரம் மேலும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்தம் முதலாம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்படும் திருத்தத்துக்கு அமைவாக எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலையானது மேலும் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவர் அய்வரி செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த அறிவிப்புக்கு அமைவாக, அடுத்த வாரம் இடம்பெறும் வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் தற்போதைய எரிபொருள் வீழ்ச்சி மற்றும் அண்மைய நாட்களான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அதிகரிப்பும் இம்முறை எரிபொருள் விலை திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்படுகிறது. இன்றைய (27) நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் அமெரிக்க மசகு எண்ணெய் விலை 72.67 அமெரிக்க டொலர்களாகவும், ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் 76.95 அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறது.…

Read More

தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்தில் பூ வெடி பட்டாசு கொளுத்தச் சென்ற ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியின் போது பட்டாசு ஒன்று வெடிக்காததால், மீண்டும் அதனை பற்றவைக்க முயன்றபோது, ​​பட்டாசு தீப்பிடித்து அவரது தலையில் பட்டதில் அவர் காயமடைந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த 31 வயதுடைய நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படவுள்ள வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு ரூ.900,000 வட்டியில்லா கடன் கிடைக்கும். நாளாந்த செலவுக்காக ரூ.300,000 தொகையும் கிடைக்கும். படிப்பு முடிந்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More